பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சத்திய வெள்ளம்

கவலையும் சிந்தனையும் கனத்த அந்த மனநிலையிலும், அன்று மல்லிகைப் பந்தல் இருந்த அழகை எண்ணிய போது,

“அருவிகள் வயிரத் தொங்கல் அடர்கொடி பச்சைப் பட்டே குருவிகள் தங்கக் கட்டி குளிர்மலர் மணியின் குப்பை

இருந்த ஒர் கருந்திரைக்குள் இட்டபொற் குவியல் போலே கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே கருத்துக்கள் இருத்தல்போலே இருள் மூடிற்றுக் குன்றத்தை” என்ற பாரதிதாசனின் அழகின் சிரிப்புப் பாட்டு பாண்டியனுக்கு ஞாபகம் வந்தது. துரத்துமலை முகடு களில் வைரக்கற்கள் உருகி ஒழுகுவதுபோல் அருவிகள் தெரிந்தன. வானிலிருந்து மாவைக் கொட்டுவதுபோல் சாரல் மேகங்களிலிருந்து இறங்கும் அழகு கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. இந்த இருள் மூட்டத்தினால் மணி ஆனதே தெரியவில்லை. பாண்டியன் எழுந்திருக்கும் போதே காலை எட்டரைமணி ஆகியிருந்தது. மோகன் தாஸ் ஏழுமணக்கே எழுந்து தன் அறைக்குப் போய் விட்டதாகவும் பத்தேகால் மணிக்கு ரிஜிஸ்திரார் அலு வலக நோட்டீஸ் போர்டு அருகே சந்திப்பதாகப் பாண்டி யனிடம் தெரிவிக்கச் சொன்னதாகவும் பொன்னையா கூறினான். விடிந்ததுமே முதல் நாள் நள்ளிரவு துணை வேந்தர் வீட்டில் பேச்சு முடிந்து மாணவர்கள் திரும்பும் போது சாலையில் நடந்த கல்லெறிக் கலவரம் பற்றி எல்லா விடுதிகளிலும் செய்தி பரவிவிட்டது. ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையும் உருவாகிவிட்டது. அறை நண்பன் பொன் னையா பிளாஸ்கை எடுத்துப் போய்ப் பாண்டியனுக்காக அறைக்கே காப்பி சிற்றுண்டியை வாங்கி வந்துவிட்டான். மாணவர்கள் அந்த மழையையும் பொருட்படுத்தாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/64&oldid=608812" இலிருந்து மீள்விக்கப்பட்டது