பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சத்திய வெள்ளம்

பேரவைத் தேர்தல்கள் காலவரையறை இன்றித் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக ரிஜிஸ்ட்ரார் அறிவித்திருக்கிறார். அந்தக் கல்லெறியை நடத்திவிட்ட இந்த அறிக்கையை ஒட்டவேண்டும் என்று காத்திருந்து ஒட்டினாற்போல் இப்போது இங்கே இந்த அறிக்கை ஒட்டப் பட்டிருக்கிறது. அமைதியான சூழ்நிலையை வேண்டும் என்றே திட்ட மிட்டுக் கெடுத்துவிட்டுச் செயற்கையாக ஒரு நெருக்கடியை உண்டாக்கித் தேர்தல்களைத் தட்டிக் கழித்துவிடப் பார்க்கிறார்கள். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இருந்து நம் உரிமை களுக்காக நாம் போராட வேண்டும். அரசியல் செல்வாக் காலும், பதவி அதிகாரங்களாலும் யார் அடக்க முயன் றாலும் நாம் அடங்க மாட்டோம். அடங்கியிருக்க நமக்குத் தெரியும். ஆனால் பிறர் நம்மை அடங்கியிருக்க நாம் அடங்கிவிடப் போவதில்லை. நம்முடைய வேண்டுதலுக் குப் பல்கலைக் கழக நிர்வாகத்திடமிருந்து நியாய்மான பதில் கிடைக்கிற வரை நாம் வகுப்புக்களைப் புறக்கணிக் கிறோம். இன்று மாலை இதே மைதானத்தில் வி.சி. நிகழ்த்த இருக்கும் பாடத் தொடக்க நாள் விழா சொற்பொழி வையும் நாம் பகிஷ்கரிக்க வேண்டும். யாருடைய நிர்ப் பந்தத்துக்காகவோ பயந்து இந்தப் பல்கலைக் கழகத்தில் மாணவர் இயக்கத்தையே ஒடுக்கிவிடப் பார்க்கிறார்கள். இதை எதிர்த்து நாம் போராடியே ஆகவேண்டும். நமக்குச் சுதந்திரம் தருகிறவர்களுக்குமுன் நாம் அடங்கியிருக்கலாம். ஆனால் நம்மை அடக்க விரும்புகிறவர்களுக்குமுன் நாம் சுதந்திரமாக இருந்தேயாக வேண்டும்.”

பாண்டியன் பேசி முடித்ததும் மைதானத்தில் திரண் டிருந்த மாணவர்களின் கைத்தட்டல் ஒய ஐந்து நிமிடம் ஆயிற்று. மைதானத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே வகுப்பு நேரத்துக்காக விடுதியி லிருந்து வந்த மாணவிகளும் அங்கே நிறையக் கூடிவிட் டார்கள். அதைக் கவனித்த பாண்டியன் உடனே “பெண் கள் சார்பில் யாராவது பேசினால் நல்லது. நீ பேசு!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/68&oldid=608804" இலிருந்து மீள்விக்கப்பட்டது