பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 95

விலுள்ள கையெழுத்து எப்படி இருக்கிறதோ அப்படியே கையெழுத்திட்டிருந்தால் தான் விலகல் மனு செல்லு படியாகும். அபேட்சை மனுவில் எஸ்.சி. பாண்டியன் என்று டி. ஒ ய் எ.என். என்னும் ஸ்பெல் லிங் கோடு கையெழுத்துப் போட்டிருந்தவன், இந்த விலகல் மனுக் கடிதத்தில் சி. பாண்டியன் என்று டி.ஐ.எ.என். என்னும் ஸ்பெல்லிங்குடன் கையெழுத்துப் போட்டு எதிரிகளின் சதியைச் சிதற அடித்திருக்கிறான். இந்தச் சாதுர்யத்தினால் இன்றிரவுக்குள் அவனை வாபஸ் வாங்கச் செய்து வெற்றிச் செல்வனைப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்க நினைத்தவர் களது எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது. ஆனாலும் நாளைக் காலை நோட்டீஸ் போர்டில் இறுதிப் பட்டியல் வெளி வருகிற வரை இது இரகசியமாகவே இருக்கட்டும். அவர்கள் நிர்ப்பந்தமாக ஏற்பாடு செய்து அனுப்பிய விலகல் மனுவில் பாண்டியன் இப்படி ஒரு சாதுரியம் புரிந்து தப்பிய விவரம் அவர்களுக்குத் தெரிந்தால் அவனை மேலும் கொடுமைப்படுத்தக் கூடும். ஆகவே நாளைக் காலை பத்துமணிக்கு இறுதியான அபேட் சகர்கள் பட்டியல் வெளியாகிறவரை உங்களுக்குள்ள அவகாசத்தைப் பயன்படுத்தி எப்படியும் பாண்டியனைத் தேடி மீட்க முயலுங்கள். அவனை இப்படி நயவஞ் சகமாகக் கடத்திக் கொண்டு போனவர்கள் இப்படிக் கடத்திக் கொண்டு போய் எதைச் சாதிக்க முயன்றார் களோ, அது பலிக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்போது கோபம் இன்னும் அதிகமாகும். அப்படிக் கோபம் அதிகமாகி அவர்கள் பாண்டியனைத் துன்புறுத்த முற்படுவதற்குள் அவனை அவர்களிடமிருந்து நீங்கள் மீட்டுவிட வேண்டும். அதுவரை பாண்டியனின் விலகல் மனுவை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன் என்று பொய்யாக ஒரு செய்தி பரவினால்கூட அவனுக்கு அது பாதுகாப்பாயிருக்கும். தனிப் பட்ட முறையில் இதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். உடனே அவனை மீட்க முயலுங்கள் என்று பேராசிரியர் எங்களிடம் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/97&oldid=608739" இலிருந்து மீள்விக்கப்பட்டது