பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6N55IILII60)LD 1 வரிகெடாமை இயக்கமானது வரி கொடாதவர்களுக் குப் பணத்தை மிச்சப் படுத்துவதற்காக ஏற்பட்டதன்று, அவர்களுடைய தியாகத்தின்மூலம் தேசத்தின் நலத்தைப் பெருக்குவதற்காகவே ஏற்பட்டதாகும். அவர்களும் தங் களேத் தூய்மை செய்து கொண்டாலன்றி இந்த முறை யைக் கையாளும் பாக்கியத்தை அடைய முடியாது. 2 ஆகவே சாத்வீக வரிகொடாமை இயக்கமானது சசி o யான பயிற்சி பெற்ற பின்னரே கையாளக் கூடிய உரிமை யாகும். எப்படி வழக்கமாகச் சட்டங்களை மீறி வருகிறவர் கள் சாத்வீகச் சட்டமறுப்புச் செய்வது கஷ்டமான காரி யமோ, அப்படியே அற்ப காரணத்தை வைத்தும் வரி கொடாதிருக்கும் வழக்கத்தை உடையவர்களும் சாக் வீக வரிகொடாமை இயக்கத்தைக் கையாள்வது கஷ்ட மானதாகும். உண்மையிலே சாத்வீக வரி மறுப்பானது ஒத்துழையாமை இயக்கத்தின் இறுதிக்கட்டமே யாகும். சாத்வீக எதிர்ப்பு சம்பந்தமான இகர வழிகளை யெல்லாம் அனுஷ்டித்துப் பார்த்துப் பலன் காணுத பொழுதே வரி கொடாமை இயக்கத்தில் இறங்க வேண்டும். ஆதலால் ஆரம்பத்திலேயே வரிகொடாமையைப் பரந்த இடங்க வளிலோ பல யிடங்களிலோ கையாள்வது முட்டாள்தனத் தின் சிகரமேயாகும்.