பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகம் 13. னின்று சிறிது விலகி கடந்தால் நன்மை அதிகமாய் விளைவ. தாய்த் தோன்றினுலும் சத்யாக்ாகி அதை விட்டு விடான். அப்பொழுதும் நடுப் பகலில் சூரிய வெளிச்சம்போல், சத்ய நெறியில் அவனுக்குள்ள நம்பிக்கை பிரகாசித்துக் கொண்டிருக்கும். அவன் ஒரு பொழுதும் மனச் சோர் வடையான். வாய்மையையே வாளாகக் கொண்டதால் அவனுக்கு வேறு வாளாவது, வெடி மருந்தாவது, வேண் டிய அவசியமில்லை. அன்பாகிய ஆன்ம பலத்தால் அவன் பகைவனே வெல்கிருன். நண்பர்களுக்குள் அதன் உபயோ கத்தைப் பரீட்சை செய்ய முடியாது. நண்பன் நண்பனே நேசிப்பதில் சிரமமுமில்லை, மேன்மையுமில்லை. பகைவன் என்று கருதுபவனே நேசிப்பதில் தான் மேன்மையுண்டு. அப்பொழுது அது ஒரு கற்குணமாகும். அதில் சிரமமு. முண்டு. ஆண்மைக்குரிய கார்யமும் மெய்யான மனே தைர்யமுமாகு ம். இம்முறையை அரசாங்கத்தினிடம் கையாளலாம். கையாண்டால், அவர்களுடைய நன்மை யான கார்யங்களை அறியவும், பிழைகளைக் கோபமின்றி அன்புடன் எடுத்துக் காட்டுவதால் வெகு சுலபமாய்த் திருத்தவும் கூடும். அச்சமுள்ள விடத்து அன்பு நிகழாது. ஆகையால் அன்பு செய்வதற்கு பலவீன மிருக்கக்கூடாது. கோழையானவன் அன்புகாட்ட முடியாது. தைரியவானே அன்புகாட்ட அதிகாரம் பெற்றவன். இம்முறையை அதுசரித்தால் அரசாங்கத்தார் செய்யும் சகல கார்யங்களை யும் சந்தேகிக்கவோ, அல்லது அவர்களிடம் கெட்ட எண் னங்கள் கற்பிக்கவோ கூடாது. அவர்கள் கார்யங்களை அன்பால் சோதிப்பின் தவறுதலும் ஏற்படாது; அதனுல் அவர்கள் நாம் சொல்வதையும் கம்புவர். அன்பு செய்வதில் கஷ்டங்களும் உண்டு. அதிகார வெறியால் அனேக முறை மனிதன் தன் பிழைகளை உணர்வதில்லை. அப்பொழுது சத்யாக்ாகி சும்மா உட் சார்ந்திருப்பதில்லை. அவன் கஷ்டம் அனுபவிக்கிருன் t