இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 1939 மார்ச் திங்கள் 12ஆம் நாள் மாலை தமிழ்மறவன்
- தாளமுத்து அடக்கம் செய்யப்பட்டபோது, தோழர்
- சி.பாசுதேவ் தலைமையில் இடுகாட்டில் நடை
- பெற்ற இரங்கற்கூட்டத்தில், இந்தி எதிர்ப்புப்
- போர்த் தளபதி பேரறிஞர் அண்ணா ஆற்றிய
- கண்ணீர்ப் பேச்சு.
- சி.பாசுதேவ் தலைமையில் இடுகாட்டில் நடை
- தாளமுத்து அடக்கம் செய்யப்பட்டபோது, தோழர்
- 1939 மார்ச் திங்கள் 12ஆம் நாள் மாலை தமிழ்மறவன்
பால் நிலவு உதிர்ந்தது!
இருதிங்கள் முன்பாக இந்திப் போரில்
இளங்குருத்து நடராசன் இறந்தான்; அந்தப்
பெருவீரன் செங்குருதி காய்வ தற்குள்
பின்னுமொரு களப்பலியா? தமிழர் கண்ணீர்த்
தெருவெள்ளக் கடல்மீது தாள முத்து
தெப்பவிழாக் காணுகின்றான்; சொந்தத் தம்பி
ஒருவனை நான் இழந்ததுபோல் உணரு கின்றேன்;
உண்மையில் நான் ஒருபாதி இறந்து விட்டேன்.
‘சாக்கோட்டை'[1] மாநாட்டில் வீர நாடார்
சமூகத்தைப் பாசறைக்குள் அழைத்துச் சொன்னேன்:
‘பூக்காடென் றெண்ணாதீர்! நீர் அனுப்பும்
போர்மறவர் மீள்வரென்ற உறுதி யில்லை!
தீக்காட்டில் நுழைகின்றோம்!" என்றேன்; அந்தத்
தீரவுரை கேட்டுவந்த தாள முத்து
சாக்காட்டைத் தழுவிவிட்டான்; எனது பேச்சைச்
சாகாத சரித்திரமாய் மாற்றி விட்டான்.
- ↑ சாக்கோட்டைச் சுயமரியாதை மாநாடு