பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

103


விட்டுவிடுவாளோ? பாவி! நீசன்! சண்டாளன்! அப்படி இப்படின்னு கூச்சலைக் கிளப்பினான்னா, பரத கண்டமே பயத்தாலே கிடுகிடுண்ணு ஆடும்டா ஆடும்!

ரங்கு : அதனாலேதான் மறுபடியும் தூதுவனை அனுப்பினா உம்மிடம்.

காகப் : நானும் இதற்குள் கொஞ்சம் தீர்க்கமா யோசித்துப் பார்த்தேன். இந்தப் பட்டாபிஷேகத்திற்குச் சம்மதம் தந்து, கூட இருந்து காரியத்தைச் செய்தா விஷேசமான பலன் இருக்கு, பரத கண்டம் முழுவதும் நம்ம கீர்த்தி பரவும். அது சாதாரணம். நம்மவா எங்கே இருந்தாலும் தலை நிமிர்ந்து நடப்பாளோண்ணோ? மதிப்பு எவ்வளவு அதிகமாகும். அதைக் கணக்கிட்டுப் பார்த்ததாலேதான் நானும் சரி! பட்டாபிஷேகத்துக்குச் சம்மதிக்கிறேன்னு புதிய தூதுவன் நீலோஜியிடம் சொல்லி அனுப்பினேன். தெரிகிறதா?

ரங்கு : தெரிகிறது ஸ்வாமி! தெரிகிறது. ஆனால் திகிலும் பிறக்கிறது.

காகப் : திகிலா? ஏண்டா மண்டு, ஏண்டா திகில்?

ரங்கு : இந்தச் சூட்சமம் அவாளுக்கும் தெரிந்துவிடுமானால், நம்ம கதி என்னங்கிற திகில்தான்.

காகப் : வீண் பயம்டா உனக்கு! நமது புராண, இதிகாசாதிகளை, நீ சாமான்யமானவைன்னு எண்ணிண்டிருக்கே... டே ரங்கு! அவைகளுக்கு ஜீவன் உள்ள மட்டும், நாம் என்ன சொன்னாலும் இவா கேட்பா! என்ன செய்தாலும் தகும். டே, ரங்கு! சொன்னா உடனே காதிலே கேட்கப் பிடிக்காத, சகிக்க முடியாத விஷயங்கன்னு சில உண்டோ, இல்லையோ.

ரங்கு : சிலவா? பல உண்டு ஸ்வாமி!

காகப் : உதாரணமாக - பஞ்சமா பாதகம் இருக்கு.

ரங்கு : ஆமாம்! கொலை, களவு, கட்குடி, சூதாட்டம்.