பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

அறிஞர் அண்ணா


ரங்கு : ஆமாம் ஸ்வாமி! அவன் வீராதி வீரனாகத் தான் இருக்கிறான். என்றாலும் அவனை நம்முடைய ஆரிய சோதறாள் எதிர்க்கிறாளே, தெரியுமா!

காகப் : ஏண்டா தைரியம் வராது? பைத்தியமே! எவ்வளவு பெரிய வீராதி வீரனாக இருந்தாலும், சிவாஜியாகட்டும், வேறே எந்த ஜீயாகட்டும் மனிதன்தானே? நாம் பூதேவாடா பூதேவா! மனிதர்களுக்கு மேம்பட்டா. அதுதானே சாஸ்திரம். அந்த சாஸ்திர பலம் இருக்கும் போது எப்படிப்பட்ட சூராதி சூரனையும் ஏன் நாம் எதிர்க்க முடியாது?

ரங்கு : சூட்சம பலம் இருக்கு ஸ்வாமி நம்மிடம்.

காகப் : சந்தேகமென்ன? நால்வகைச் சேனைகள் உண்டு அவனிடம்; சிவாஜியிடம்; நம்மிடம் நாலு வேதங்கள். அஸ்திர சாஸ்திரம் அவனிடம்; ஆகம சாஸ்திரம் நம்மிடம். வாள் ஏந்துகிறான் அவன்! கூர்மையான வாள்; கேவலம் புல்லைத்தான் ஏந்துகிறோம் நாம். உலர்ந்து போன புல்லடா, புல். ஆனால் பாரடா மண்டு! புல் ஏந்தியின் ஆசி கிடைத்தால்தான் அவன் பூபதி ஆக முடியும். பூகரரிடம் ஓலையனுப்பினேன் முதலில், சம்மதம் தர முடியாது பட்டாபிஷேகத்திற்கு என்று.

ரங்கு : ஆமாம்! நானும் கூட கொஞ்சம் பயந்துதான் போனேன். உம்முடைய சம்மதம் கிடைக்காப் போனா என் தலையிலே கிரீடம் ஏறாமலா போகும்னு கோபமாகப் பேசிவிட்டு, எங்கே அவர் மகுடாபிஷேகம் செய்துண்டுடறாளோன்னு நினைச்சேன்.

காகப் : முடியுமா? அப்படி அவர் துணிஞ்சி செய்யறதுன்னு ஆரம்பிச்சா நம்ம படைகள் சும்மா இருக்குமா? ஏண்டா, பேந்தப் பேந்த விழிக்கிறே? நமக்கு ஏது மராட்டியத்தில் படையின்னு விழிக்கிறியா? படைன்னா நான் நம்ம ஆரியச் சோதராளைச் சொல்றேண்டா. அவா சும்மா