பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

105


ததும்பும்டா கதைகளிலே ஆனா அவைகளைப் பஞ்சாமிர்தமா எண்ணிப் பருகுறாளோண்ணோ மகாஜனங்க? பார்க்கிறாயோண்ணோ.

ரங்கு : ஆமாம் ஸ்வாமி!

காகப் : அப்படி இருக்க, நம்ம புராணம், இதிகாச சாஸ்திரம் இவைகளெல்லாம் இப்படி இருக்கும் போது மராட்டிய மண்டலத்துக்கு மகாராஜனாக சிவாஜி நம்முடைய சம்மதம் கேட்காமல் இருப்பானோ? ஒவ்வொரு கோட்டையைப் பிடிக்கிற போதும் கொக்கரிச்சிருப்பா ஜெயவிஜீ பவ என்று. ஊர்களைப்பிடிக்கும் போது உற்சவம் நடத்தி இருப்பா. அந்தக் களிப்பினிலே களத்திலே பிணமான மகனைக் கூட தந்தை மறந்திருப்பான். ரத்தத்தை ஆறுபோல் ஓடவிட்டு, பிணங்களை மலை மலையாகப் போட்டு வெற்றி முரசு கொட்டியிருப்பா! சங்கம் ஊதியிருப்பா, ஜெயம் ஜெயம்ணு, அந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை ரங்கு, உன் குரு, படை எடுக்காமலே, இருந்த இடத்திலிருந்தே ஜெயித்து விடுகிறதைப் பாருடா. இது தானடா மண்டு ஆரிய யோகம்.

ரங்கு : இந்த அண்ட சராச்சரங்களிலே இதற்கு ஈடுகிடையாது குருதேவா.

காகப் : ஒரு பெரிய சாம்ராஜ்யாதிபதியை நான் விரும்பினால் பூபதியாக்க முடியும். எனக்கு இஷ்டமில்லேன்னா அவனையே பாபியாக்க முடியும். நீ, இந்த ஆரிய வாழ்வை, அற்பமென்று கருதி ராஜயோகம் கேட்டாயோடா ராஜயோகம். எத்தனை ராஜாக்கள் வேண்டுமடா, உனக்குப் பணிவிடை செய்ய? புறப்படு ரங்கு, மராட்டியத்தின் மீது படையெடுப்போம். கட்டு மூட்டையை; கொட்டு முரசை; ஒஹோ! இங்கே இல்லையா? அது சரி வா! அங்கே போய் அவன் அரண்மனையிலேயே உள்ள முரசையே கொட்டுவோம். நம்ம ஜெயத்தைத் தெரிவிக்க நாம் சிரமப்பட்டுக் கொட்டுவானேன். அவர்களையே விட்டுக் கொட்டச் செய்வோம் புறப்படு.