பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

37


பாலாஜி : புத்தி சொல்லிப் பார்ப்பதுதானே?

சாந் : நான் ஏதாவது பேச ஆரம்பித்தால் அவன் அகோரக் கூச்சல் போட்டு அடக்கிவிடுகிறான்.

பாலாஜி : ஒரு யோசனை! இந்தக் காதல் இருக்கிறதே. அது ஒரு மாதிரியான வெறி. வேறு ஒருவர் அத்தக் காதலைத் தட்டிப் பறித்து விடுவார்கள் என்று தோன்றினால் போதும், காதல் பித்துக் கொண்டவர்கள் காலடியில் விழுந்தாவது காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வார்கள்.

சாந் : விளங்கச் சொல்லப்பா?

பாலாஜி : இந்துமதியை வேறு யாரேனும் காதலிப்பதாகத் தோன்றினால் போதும்; தானாக வழிக்கு வருவான்.

சாந் : அது எப்படி சாத்தியமாகும்?

பாலாஜி : நான் ஏற்பாடு செய்கிறேன் ஒரு ஆளை. இந்துவைக் காதலிப்பது போல் நடந்து கொள்ளச் சொல்லுகிறேன்.

சாந் : விளையாட்டு வினையாகிவிட்டால்?

பாலாஜி : ஆகாது; ஆகாது!! நான் கவனித்துக் கொள்கிறேன்.

சாந் : யாரை ஏற்பாடு செய்கிறாய்? அவன் யோக்கியனாய் இருக்க வேண்டும். சபலப் புத்தி கூடாது. இந்துவிடம் உண்மையாகவே காதல் கொண்டு விடக்கூடாது.

பாலாஜி : எனக்குத் தெரியாதா? உங்களுக்குப் பகதூரைத் தெரியுமா?

சாந் : அவனா? சுத்தப் பயங்கொள்ளிப் பயலாச்சே! பெண்களிடம் பேசவே தெரியாதே.

பாலாஜி : அப்படிப்பட்டவனை நம்பித்தான் இந்தக் காரியத்தில் இறங்க வேண்டும். எப்படி நடந்து கொள்வது என்று நான் அவனுக்குக் கற்றுக்