உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலை

௮௭

புரிந்து கொள்ளத் திருவுளங் கொண்டருளினார். மேலும், மன்மதன் மஹாவிஷ்ணுவின் குமாரன் பிரம்மாவுக்கு ஸஹோதரன். அவனே பிரம்மா. அவனாலே படைப்புத் தொழில் தோன்றுதல் ப்ரத்யக்ஷமன்றோ?

நித்யானந்த பால ஸந்நியாசி ரிக்வேத முழுதையும் ஸாயன பாஷ்யத்துடன் படித்தவர். உபநிஷத்துக்களில் முக்கியமான தசோபநிஷத்துக்களை சங்கர பாஷ்யத்துடன் கற்றுணர்ந்தவர். மற்றும் எண்ணற்ற அத்வைத நூல்களிலும் விசிஷ்டாத்வைத நூல்களிலும், தர்க்கம் மீமாம்ஸை யோகம் ஸாங்க்யம் முதலிய சாஸ்திரங்களிலும், புராண இதிஹாசங்களிலும், காவ்யங்களிலும், நாடகங்களிலும் அபாரமான பயிற்சியுடைமையால், ஹிந்து மதத்துக்கும் இந்து நாகரீகத்துக்கும் தக்க ப்ரதிநிதியாகக் கருதத்தக்கவர்.

தவிரவும், ஹிந்தி, வங்காளி, மஹாராஷ்ட்ரம், தெலுங்கு, தமிழ், இங்கிலீஷ் இந்த ஆறு பாஷைகளிலும் மிக உயர்ந்த தேர்ச்சி கொண்டவராய், இவற்றில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சாஸ்திரங்களையும் காவ்யங்களையும் நன்கு பயின்று சிறந்த அறிவுத் தெளிவு படைத்தவர். எனவே, இவர் சொல்லும் வேதாந்தம் வெறுமை வாய்ப் பேச்சு மாத்திரமன்று. உள்ளத்தில் பலவித ஆராய்ச்சிகளாலும், உயர்ந்த கேள்விகளாலும், தெளிந்த வாதங்களாலும் நன்றாக அழுந்திக் கிடந்த கொள்கை. இவருக்கு ஜீவன்முக்தி பதம் ஏற்படுவதற்கு ஸ்திரீயில்லாத குறைதான் ஒரு பெருந்