உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௮௮

சந்திரிகை

தடையாக நின்றது. ஏனெனில், பொருளில்லாவிடினும் கல்வியில்லாவிடினும் ஒருவன் ஜீவன்முக்தி பதமெய்தலாம். ஆனால் காதல் விஷயத்தில் வெற்றி பெறாதவன் முக்தியடைந்து இவ்வுலகில் வாழ்வது மிகவும் சிரமம் என்று தோன்றுகிறது.

பௌத்தமதத்தின் மேம்பாட்டினாலே தான், ஆரம்பத்தில் பெண்ணுடன் கூடிவாழும் வாழ்க்கையை விட்டு முக்தி தேடப் புகும் வழக்கம் இந்நாட்டி லும், உலகத்திலும் ஊர்ஜிதப் பட்டதென்று நினைக்க ஹேது இருக்கிறது பூர்வீக வேத ரிஷிகவெல்லோரும் பத்தினிகளுடன் வாழ்ந்ததாகவே முன்னூல்கள் சொல்லுகின்றன. பௌத்த மதத்திலிருந்து தான் ஹிந்து மதமும் பிற மதங்களும் ஒரேயடியாக உலகத்தைத் துறந்து விடுவதாகிய நித்ய ஸந்நியாஸ முறையைக் கைக்கொண்டனவென்று கருதுகிறேன். வேதரிஷிகள் மோக்ஷத்துக்கு ஸாதனமாகச் செய்த வேள்வியிலெல்லாம் அவர்களுடன் மனைவியிருமிருத்தல் அவசியமாகக் கருதப்பட்டது. பூர்வ விஷயங்கள் எங்ஙனமாயினும் “இல்லறமல்லது நல்லறமன்று” என்னும் ஔவை (?) வாக்கியத்தையே நான் ப்ரமாணமாகக் கொண்டிருக்கிறேன். காதல் தவறான வழிகளில் செல்லும்போதும் உண்மையினின்றும் நழுவும் போதும் மாத்திரமே, அது இவ்வுலகத்தில் பெருந்துன்பங்களுக்கு ஹேதுவாகிறது. உண்மையான காதல் ஜீவன்முக்திக்குப் பெரிய ஸாதனமாகும். “உண்மையான காதலின் பாதை மிகவும் கரடுமுரடானது” என்று ஷேக்ஸ்பியர் என்ற ஆங்கிலக் கவி-