உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௯௮

சந்திரிகை

முக்தி யடைவது ஸுலபமென்று கருதி மனதைப் பலவகைகளில் இடையறாமல் அடக்கி அடக்கி பலாத்காரஞ் செய்துகொண்டு வந்ததினின்றும், புத்தி கலங்கிவிட்டது. எழுத்து வேலை சரியாக நடத்த முடியவில்லை. வீட்டிலேயே ஒரு நாட்டு வைத்தியர் வந்து பார்த்துச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார். மந்திரவாதிகளை அழைத்துப் பார்க்கலாம் என்று சங்கரய்யர் சொன்னதற்கு விசாலாக்ஷி அது அவசியமில்லையென்று சொல்லிவிட்டாள்.

விசாலாக்ஷியின் கதி மிகவும் பரிதாபகரமாயிற்று. திடீரென்று ஸ்வர்க்கலோகத்தில் இந்திர பதவியினின்று தள்ளுண்டு மண்மீது பாம்பாகி விழுந்த நஹுஷன் நிலைமையை இவள் ஸ்திதி ஒத்ததாயிற்று.

காதலால் மோக்ஷமே பெறலாமென்று விசுவநாத சர்மா சொல்லியதை இவள் மனம் பூர்த்தியாக நம்பித் தனது அற்புத ஸௌந்தர்யமும் ஞானத் தெளிவுமுடைய அக்கணவனை ஒருங்கே மன்மதனாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் கருதிப் போற்றிவந்து அவனன்பினால் ஆனந்தபரவசமெய்தியிருந்தாள். அவனுக்கு இந்தக் கொடிய நோய் நேர்ந்ததைக் கண்டு துன்பக் கடலில் அமிழ்ந்திப் போய்விட்டாள். இடையிடையே விசுவநாத சர்மாவுக்கு புத்தி தெளியும் நேரங்களும் வருவதுண்டு. அப்போது, அவர் விசாலாக்ஷியை அழைத்துத் தன் அருகில் இருத்திக் கொண்டு:— “கண்ணே, நீ எதற்கும், எதற்கும், எதற்கும் கவலைப்படாதே. கவலைப்-