விடுதலை
௯௭
மறந்து எழுந்து குதிக்கத் தொடங்கிவிடுவார். சில ஸமயங்களில் இருவரும் கைகோர்த்துக் கொண்டு நாட்டியம் புரிவார்கள். வேலைக்காரக் கிழவியும் குழந்தையும் ஓரறைக்குள் படுத்துக் கொண்டு தூங்கிப் போய் விடுவார்கள். தோட்டத்திலிருந்த சிங்காரப் பரணில் இந்த தம்பதிகளின் களிகள் நடைபெறும்.
இவ்விருவரும் ஒருவர்க்கொருவர் படைத்த காதல் மானஷிகமன்று; தெய்விகம். அது கலியுகத்துக் காதலன்று; கிருதயுகத்துக்காதல், ஒரே பெண்ணிடம் மாறாத காதல் செலுத்துவதாகிய ஏகபத்தினி விரதத்தில் ஸ்ரீராமபிரான் புகழ்பெற்றவன். ஆனால் அவனும் பத்தினியிடம் ஸம்சயங்கொண்டு இலங்கையிலே அவளைத் தீப் புகச் செய்தான். பின்பு உலகப் பழிக்கு அஞ்சி, அவளைக் காட்டுக்குத் துரத்தினான். இவ்விதமான களங்கங்கள் கூட இல்லாதபடி நமது விசுவநாத சர்மா சாக்ஷாத் வைகுண்ட நாராயணனே ஸ்ரீதேவியிடம் செலுத்துவது போன்ற பரம பிரேமை செலுத்தினார். சிவன் பார்வதி தேவியிடம் செலுத்தும் பக்தி நமது விசுவநாத சர்மாவால் விசாக்ஷியிடம் செலுத்தப்பட்டது. அவளும், இப்படிப் பரம ஞானியாகிய கணவன் தன்னிடம் தேவதா விசுவாஸம் செலுத்துவது கண்டு பூரிப்படைந்து தான் அவரை ஸாக்ஷாத் பகவானாகவே கருதி மஹத்தான பக்தி செலுத்தி வந்தாள். இப்படியிருக்கையிலே விவாகம் நடந்து ஒன்றரை வருஷமாவதற்குள் விசுவநாத சர்மாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் மிகச் சிறந்த ஞானியாயினும் யோகாப்யாஸத்தால்
ச. எ