பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22



யிருக்கிறானே. அவர்தானே இவனையும் படைத்தது? உம்மையும் படைத்தது உமக்கும் இவனுக்கும் ஏன் இவ்வளவு வேற்றுமை?


வாஞ். அது அவன் விதி!

துரை: விளங்கக் கூறத் தெரியாததற்கு விதி என்று சுற்றிக் காட்டினால் அதை மக்கள் ஏற்கும் காலம் மாறி வருகிறது.

பீச் : ஐயா ! ஆளுக்கொரு காலணா போட்டா இந்த ஏழை வயிற்றுப் பசிக்கு ஒருவேளை சாப்பாடாகும் சாமி

சிங்: சேச்சே ! இந்தப் பிச்சைக்காரங்க தொந்திரவு ரொம்ப ஜாஸ்தியாப் போச்சு! இவனுகளுக்கு ஒரு சத்திரம் சாவடி கட்டிப் போடணும். டேய்! போடா இது கோயிலு.

வாஞ்: முதலியார்வாள்! ஜெர்மனியிலே பிச்சைக்காரர்கள் என்ன செய்யுறா தெரியுமோ? சுட்டுத் தள்ளிடுவா.

துரை: என்ன கல்னெஞ்சமய்யா உமக்கு! அந்த ஏழையும் மனிதன் தானே உம்மைப்போல, அன்பே சிவம். சிவமே அன்பு என்று பேசுகிறீர்கள். ஏழையைக் கண்டால் சுட்டுத்தள்ள வேண்டுமென்கிறீரே. அந்த ஏழைக்கும் ஒரு காலம் வரும். அந்த உதர்ந்த உதடுகளிலிருந்து உக்கிரம் பிறக்கும். கண்கள் கனலைக்கக்கும். புழுவும் போரிடும். அப்போது உங்கள் செல்வம்,அந்தஸ்து, சாஸ்திரம் யாவும் மண்ணோடு மண்ணாய் போகும். உழைக்கிறான் மாடு போல. ஆனால் உண்ணு கொழுப்பது நீங்கள். வீட்டைக் கட்டிக் கொடுத்த அவனுக்கு தங்குவதற்கு இடமின்றி வீதியிலே விழுந்துகிடக்கிறான். அவன் இடுப்பிலே உடுத்திருப்பது கந்தல். ஆனால் உள்ளே ஆலயத்தில் பள்ளிகொண்டிருக்கும் ஆண்டவனுக்கு பட்டு பீதாம் பரம் எதற்காக? அவன் குடியிருப்பதற்கு இவ்வளவு பெரிய மண்டபம் எதற்காக? அதே நேரத்தில் நீர்பட்டு மெத்தையிலே கொசு வலைக்கு ஊடே துயிலுவதை காண்கிறான். அவன் உள்ளம் கொதிக்காதா. ஆண்டவன்