பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

 சாம்: மறந்து வந்துவிட்டேன் மலரைத் தேடி வண்டுதான் வலிய வரும்.

சந்: தனிமையாய் இருக்கும் ஒரு பெண்ணிடம் பேசத்தெரிய வேண்டும்.

சாம். நீ யார். உன் பெயர் என்ன ?

சந்; முன்பின் பழக்கமற்ற என்னிடம் என்னென்னமோ கேட்கிறீரே?

சாம்: நிலவு காயும்போது மாடியில் நின்று அதன் அழகை ரசித்தால் இன்பம் உண்டாகும். ஆனால் அதை பிடித்து எப்போதும் அருகிலேயே வைத்துக் கொள்ளவேண்டு மென்றா என்னம் எழுகிறது? நிலவு இசை எல்லாம் ஒன்று தானே. இசைவந்த திசை நோக்கி வந்தேன் முகத்தைக் கண்டேன். உன்னை அடைந்தால் அந்த இசையையும் சேர்த்து அடைந்துவிட்டோமென்று ஆனந்தப்படுவேன். நீ யார்.

சந்: சிங்காரவேலரைத் தெரியுமா உங்களுக்கு?


சாம்: அந்தச்சண்டாளரை-சதிகாரரைத் தெரியாமலென்ன? அந்தப்பாவியால்தானே என் ஆருயிர் தோழனை இழந்தேன். என்னையும் சிறைக்கு அனுப்பினார். இன்றுதான் வந்தேன். நெறித்த முகம், முறுக்கிவிட்ட மீசை. நெற்றி யிலே விபூதி. அதனூடே சந்தனப்பொட்டிட்டு, மந்திர வேலை செய்தே ஊர்ச்சொத்துக்களுக்கு அதிபதியானவர். ஏன் தங்களுக்கு வேண்டியவரா?

சந்: ஆம்! நான் அவருக்கு தூரத்து உறவு!

சாம்: ஆ! வேண்டாம். உறவு வேண்டாம். சிங்காரவேலர் இல்லம் உன்னைப்போலுள்ளவர்களுக்கு ஏற்றதல்ல; தயவு செய்து போய்விடு.


சந்: இவ்வளவு தெளிவாகப் பேசுகிறீர்களே - தாங்கள் யார்? உங்கள் பெயர்?

சாம்: நான்...... என் பெயர் சாம்பசிவம். உன் பெயர்?

சுந்: அதுதான் வந்தவுடன் வானத்தைப் பார்த்து வர்ணித்தீர்களே!

சாம்: ஆ : சந்திரன்! சந்திரோதயம்! சந்: ஏறக்குறை அதுதான். (ஓடி மறைகிறாள்) புன்னகை பூங்கொடியே-பாடல்