பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

(சாம்பசிவம் பாடிவிட்டு தனியே நின்று புலம்புகிறான்)

சாம்: காதல்! காதலைப்பற்றி கவிதையிலே படித்ததுண்டு ஆனால் அதை இன்று தான் கண்ணெதிரே காண்கிறேன். காதல் கண்களுக்கு மட்டும் விருந்தளிப்பதில்லை. மனதிலேயும் அழியாத ஓவியமாக வரையப்பட்டுவிடுகிறது. ஆஹா! என்ன இனிமையான பாடல்! மதுரமான ஒலி ! மயக்குகின்ற மொழி! மான் விழி ! இவள் மட்டும் எனக்கு கிடைத்துவிட்டால் வாழ்க்கை பூறாவும்.......... (அனுபவிக்கிறான்) சே! என்ன ஆசை! ஊர் முதலை கொள்ளையடிக்கும் சிங்கார வேலருக்கு மாதிரி! (சிந்திக்கிறான். உள்ளம் குழம்புகிறது.) ஊர் பேர் தெரியாது! கேட்க மறந்துவிட்டோமே. பெயர் சந்திரோதயம் ! இனி ஊரைக்கேட்க வேண்டும்! பிறகு என் வாழ்க்கையில் வெற்றிதான்!

தோழி: (பின்னால் வந்து) பக்தா! உன் பக்திக்கு மெச்சினோம். திரும்பிபார் !

சாம்: யார் நீ? எனக்கு சந்திரோதயம் கிடைப்பாளா?

தோழி: உயிர் ஊட்டியவளே உன்னைக்காப்பாற்றுவாள்.

சாம்: அப்படியா?

தோழி: ஆம் நீ செய்த குற்றத்திற்கு தண்டனையை அனுபவிக்க தயாராயிரு !

சாம்: ஆ ! தண்டனையா?

தோழி: ஆம். நீ ஒரு போக்கிரி.

சாம்: நான் போக்கிரியா ?

தோழி: அது கோர்ட்டில் தெரியும்.

சரம்: கோர்ட்டிலா? இது என்ன புரியாமல் பேசுகிறாய்? நீ யார்?

தோழி: சந்திரோதயத்தின் உள்ளத்தை திருடிவிட்டாய்.

சாம்: ஆ! (ஆச்சரியப்படுகிறான்) அப்படியா? என்னை. அவளுக்குத் தெரியுமா?