பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தோழி: உங்களை அவள் தெரிந்து வைத்திருக்கிறாள். உங்களுக்குத்தான் தெரியவில்லை. முன்பு கழகத்திலே பணியாற்றியபோது உங்களைப் பார்த்திருக்கிறாள்.

சாம்: ஆஹா! என் இருதயத்தை திறந்துவிட்டீர்கள். நீங்கள் அவளுக்கு யார்!

தோழி : நீ சொன்னாயே! இருதயத் திறவுகோள் என்று? அது சரி - உம்மிடம் சில கேள்விகள் கேட்க விரும்பு கிறன். பதில் சொல்வீர்களா?

சாம்: தாராளமாக கேளுங்கள். மதில் சொல்கிறேன்.

தோழி: ரோஜாவை விரும்புகிறவர்கள் அதைச் சுற்றி முன் இருப்பதை பார்த்தால் விட்டுவிடுவார்கள் என்று நான் கூறுகிறேன். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்.

சாம்: முட்டாள்கள் அவர்கள். முள் இருந்தால் என்ன? தேவையிருக்கும்போது பறிக்கத்தான் வேண்டும் பக்குவமாக.

தோழி: மற்றொன்று! வண்டு கொட்டுமே என்று பயந்தால் தேன் கிட்டுமா?

சாம்: எப்படிக் கிட்டும்? வண்டுகளை விரட்டித்தான் தீர வேண்டும். வண்டுகளுக்கு விரண்டுவிடுவதா?

தோழி: இன்னுமொன்று. சேற்றிலே செந்தாமரை இருந்தால் என்ன செய்வீர்?

சாம்: சேற்றிலே இருந்தால் என்ன? பறித்து வரத்தான் வேண்டும்.

தோழி: அப்படியா? அப்படியானால் பார்ப்போம். நாள் சந்திரோதயத்தின் தோழி. சந்திரோதயம் சிங்கார வேலரின் மகள்!

சாம்: ஆ! (அதிர்ச்சியடைகிறான்) என் தண்பன் துரைராஜை வீண் குற்றஞ்சாட்டி சிறைக்கனுப்பத் துணிந்தவனின் மகளா? இன்று ஊரை விட்டோடச் செய்து வாடவிட்டவனின் மகளா?