பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

மடாதி: சபாஷ்! குலம்?
சிஷ்: பிரம்ம குலம்!
மடாதி: பூங்கொடியோ?
சிஷ்: வஞ்சிக்கொடி!
மடாதி! நஞ்சல்லவே?
சிஷ்: அமிர்தமல்லவா.
மடாதி: அருந்தலாமா!
சிஷ் : தடையேதுமில்லை. தாராளமாக!
மடாதி: பெயர்!
சிஷ்- லலிதா!
மடாதி: அழகான பெயர்! வசந்த மண்டபத்தில் எல்லாவித சௌகரியமும் இருக்கும். என்ன இருந்தாலும் இந்த சடையும் முடியும் தான் சற்று தொல்லை கொடுக்கும் சரி—வஸ்து தனியாகவன்றோ இருக்கும்
சிஷ்: ஆமாம்--சென்று வாருங்கள்.
மடாதி: செலவுக்கு!
சிஷ்: பெற்றுக்கொண்டேன்.
மடாதி: தாராளமாக செலவு செய்
சிஷ்: புதிய பாத்திரம் பக்குவமாக கையாள வேண்டும். சென்று வாருங்கள்.

—◯—


[வாஞ்சி நாதரிடம் கோபத்துடன் தாய்வீடு வந்த லலிதா மடாதிபதி தாபத்தை தணிக்க முன் வருகிறாள்]
(லலிதாவிடம் சிஷ்யன்)
சிஷ்: வலிதர உன் சாமர்த்தியத்தைத்தான் நம்பி இருக்கிறோம்.
லலி: அதைப்பற்றி கவலை வேண்டாம்.
சிஷ்: நீ நம்ப வேண்டுமே.
லலி: நானும் நம்பித்தான் வந்திருக்கிறேன்.
சிஷ்: தம்பிரான் தொட்டால் பொன் பூக்கும் உடலாகும். ஆனால் என் குடும்பத்தார் என்னை நினைத்தால்.....
சிஷ்: இரண்டு இரவு ஒரு பகல் தானே லலிதா!
லலி: ம்!...சரி.
சிஷ்: ஜாக்கிரதையா யிரு
லலி: சரி

சந்-3.