பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சிஷ்: தம்பிரான் கண்ணோடு புதைய வேண்டும்.
லலி: சரி! பார்க்கிறேன்.
சிஷ்: அதோ தம்பிரான் வருகிறார், (சிஷ்யன் மறைகிறான்)
மடாதி: வர்ணனையை விட வஸ்து நன்றாகவே இருக்கிறது. உட்கார். உன்னை பார்த்து என் கண் பூரித்து விட்டது.
லலி: ஏன் இவ்வளவு தாமதம்?
மடாதி: காலையெல்லாம் சைவத்தைச் சுமந்து நொந்தேன், கட்டழகி! மடத்திலேயோ மன்னார்சாமிகள் வருவதும் போவதும் ஓயவில்லை.
லலி- கனிரசம் அருந்துகிறீர்களா?
மடாதி- உன் பவழ வாயை விடவா இது சுவைக்கும்? உன் இதழோரத்தில் நெழிந்தோடும் ரசத்தை விட கனிரசமா ருசியாயிருக்கும்?
லலி- ஏதாவது பாடட்டுமா?
மடாதி- பாடு.
(மணவாளன் இவர்தானடி- பாடல்)
மடாதி - திவ்யமான சாரீரம்! எங்கடி சிட்க்ஷை?
லலி- பண்ணையூர் பார்த்தசாரதி அய்யங்காரிடம் ஐந்து வருஷம் சிட்க்ஷை பெற்றேன்.
மடாதி-ஓ! அவருக்கு ஒரு மகள் கூட உண்டு.
லலி - நல்ல சிவப்பு.
மடாதி- உன்னை விடவா! நீ தான் முதல்! ரகம்!
லலி: எல்லாம் இப்படி விடியும் வரைதான் விளையாடுவோம்.
மடாதி. ஏன்?
லலி: இன்னும் மூன்று நாட்கள் தான் இந்த ஊரில் இருப்பேன். தாய் வீட்டில் அதிக நாள் தங்கக்கூடாது! பிறகு அவர் வீட்டிற்கு போனால் மூன்று மாதமோ- ஆறு மாதமோ!
மடாதி- நான் அங்கு வருகிறேன்.
லவி- வேண்டாம்! அது ஒரு மாதிரியான ஊர்!
மடாதி-அப்படியா!
லலி- என் இஷ்டத்தை பூர்த்தி செய்வீர்களா!
மடாதி- கரும்பு தின்னக் கூலியா!

—◯—