பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யாவின் புகழ்மாலை!

“இதை நாம் சுமார் 10, 15 வருஷ காலமாகவே சிந்தித்துச் சிந்தித்து ஒன்றும் கைகூடாமல் இப்போது தோழர் அண்ணாதுரை அவர்கள் துணிவோடு கிளம்பி முகத்திற்குச் சாயம் பூசிக் கொண்டு மேடையேறிப் பாவலாப் போடவும் அதை ஒரு சமயத்தில் 500 மக்கள் பார்த்துக் களிக்கும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறதையும் பார்த்து நாம் பெருமை அடையாமல் இருக்கமுடியவில்லை.”

“தாடகம் பார்த்த மக்களுக்கு வெகு உணர்ச்சியாகவும் அறிவுக்கு நல் விருந்தாகவும் மானத்திற்கு உயர்தர வழி காட்டியாகவும் தொடக்கம் முதல் முடிவு வரை விளங்கியது என்பது சிறிதும் மிகைப்பட கூறியதாக ஆகாது.”

“சமய சஞ்சீவிகளுடன் அரசியல் சேற்றில் புரண்டு அல்லல் படாமல் இம்மாதிரி தொண்டு உண்மையும் பயனளிக்கக் கூடியதுமாகும் என்று தெரிவித்துக் கொண்டு அண்ணாதுரையையும் காஞ்சி திராவிட நடிகர் கழகத்தாரையும் மனமார வாயாரப் பாராட்டி ஆசி கூறுகிறோம்.”



நாடகத்திற்கு பெரியார் தலைமை தாங்கி பாராட்டினார். 27.11.43 குடியரசில் தலையங்கமாக எழுதியது.