பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

சத்: போதும்! (சிறிது யோசனை செய்து) கோவில் நகைகளை திருவிழாவின் போதுதானே எல்லோரும் காணவேண்டும் அதற்குள் எப்படியாவது வாங்கி விடலாம்.

வா: அடுத்த மாதந்தானே திருவிழா.

சிங்: பரவாயில்லை. என்னைப்பற்றி கவலையில்லை. நீ சாம்ப சிவத்தோடு சந்தோஷமாக இரு” பிறகு நடந்தபடி நடக்கட்டும்.

சந்: அப்பா! என்னை இவ்வளவு அருமையாக வளர்த்த தாங்கள் என்னை சந்தோஷமாக இருக்கச் செய்து விட்டு தாங்கள் துன்பப்பட்டால் அதை நான் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா. என் துன்பத்தை காண சகியாத தாங்கள் எப்படியோ அப்படியேதான் நானும். புரோகிதரே! அடுத்த வெள்ளிக்கிழமை நல்லூர் ஜெமீன்தாரருக்கு நான் நாயகி. அப்பா! விபரம் தெரியாமல் ஏதேதோ பேசி விட்டேனே, என்னை மன்னித்து விடுங்களப்பா. புரோகிதரே உடனே போய்ச் சொல்லும்.

சிங்: மகளே! நீ என் மகளல்ல தெய்வம்!
(காலில் விழுகிறாள்)

சந்: அப்பா! (அலறியபடி தூக்கி அணைத்துக் கொள்கிறாள்)

வா: போகிற போக்கில் சாம்பசிவத்திடமும் சொல்லிவிடுகிறேன். அவரவர்களுக்கு எங்கே முடி போட்டிருக்கோ அதுபோலதானே நடக்கும்.

சந்: (ஆத்திரமாக) புரோகிதரே! நீர் நல்லூர் போய் சொல்லி வாரும் முதலில்.
(புரோகிதரும் சிங்கார வேலரும் போகின்றனர். சந்திரா சோகமாக பாடுகிறாள்)

“இன்பங்காணுவேனா” — பாடல்.

(திருமணம் முடிந்துவிடுகிறது. ஒருநாள் வாஞ்சிநாத சாஸ்திரி தெருவில் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டே வருகிறார். எதிரே விஷ்ணு பக்தர் ஒருவர் வருகிறார்)

விஷ்ணு: என்ன சாஸ்திரிகளே! இதை ஆத்துலேயே சாப்பிட்டுட்டு வரப்படாது? வீதியிலயா சாப்பிடுறது? முதலியார் மகள் கல்யாணத்துல நல்ல சான்சாமே!