பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

சாம்— உண்மையாகவா? நல்லூரானை நீ விரும்பவில்லையா?
சந்— ஆம் ஆனால்...
சாம் — என்ன நடந்தது?
சந்- யாரோ ஒருவன் என் தந்தையை ஏமாற்றிவிட்டு சொத்துக்களை அபகரித்துக்கொண்டு மறைந்து விட்டான். களவுபோன சொத்துக்களில் கோவில் திருவாபரணமும் போய்விட்டது. நாளை திருவாபரணம் எங்கே என்று கேட்டால் என்னபதில் சொல்வது என்று தந்தை கலங்கினார். நல்லூராருக்கு என்னை மணமுடித்து விட்டால் களவுபோன நகைகளை வேறு வாங்கிவிடலாமென்று என்னைக் கெஞ்சினார், நான் முதலில் மறுத்தேன். அவர் சிறைக்குசென்று கஷ்டப்படுவதை என்னால் காணமுடியா தென்று பிறகு தந்தைக்காக இந்த தியாகம் செய்ய தயாரானேன்.
சாம்- (மகிழ்ச்சியாக) அப்படியா சந்திரா ! நான் ஒன்று சொல்லப்போகிறேன் மறுக்கமாட்டாயே.
சந்- நான் அதை மறுப்பேனா? நான் என்றும் உங்களுடையவள் தானே.
சா- அப்படியானால் உன் தந்தையிடம் கூறி நமது மறு மணத்திற்கு விரைவில் ஏற்பாடு செய்யச்சொல்
சந்- என் தந்தை ஒப்புக்கொள்வாரா? அவர்தான் வைதீக வெறியராயிற்றே?
சாம்- அப்படியானால் இன்னும் நமது இன்ப வாழ்விற்கு இடையூறு செய்வாரா?
சந்- இனிவிலகி நில்லுங்களென்று துணிந்து கூறுவேன்.
சாம்- வெற்றி நிச்சயம்.நமது ஊருக்கு மாயேந்திரன் என்று யாரோ ஒரு ஜமீந்தார் வந்திருக்கிறாராம். அவர் இதைப் போன்ற சீர்த்திருத்தங்களுக்கு ஆதரவு தருகின்றாராம். ஏழைகளை ஆதரிக்கின்றாராம். நாமும் அவரை அணுகி விரைவில் மறுமணத்திற்கு ஏற்பாடு செய்வோம். எங்கே கொஞ்சம் சிரி. (சிரிக்கிறாள்) மலர்ந்தது வாழ்வு! மீண்டும் வாழ்வைப் பெற்றேன்.

◯—◯

(மாயேந்திரனாக மாறியிருக்கும் துரைராஜ் வேலைக்கார வெள்ளையனோடு பேசிக்கொண்டிருக்கிறார்.)
மாயே — வெள்ளை! வெள்ளை! டேய்!