பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

(சாம்பசிவம் தோட்டத்தில் தனிமையில் நின்று புலம்புகிறான்)

சாம்: என்ன வாழ்வு! என்னை மணம் செய்து கொள்ள மறுத்து ஜெமீன்தாரருக்கு மாலையிடப் போவதை காண சகிக்காமல், சந்திராவை மறந்துவிட முடிவுசெய்து வெளியூர்களைச் சுற்றியலைந்தேன். மீண்டும் ஊருக்கு நண்பர்களைக் காண வந்தேன். ஒரு மாதத்திற்குள் சந்திரா விதவையாகி விட்டாளாம். அய்யோ! உலகமறியாதவள்? (சற்று உலாத்திவிட்டு) இங்கு சந்திரா வருவதாக கூறியனுப்பினான். இன்னும் காணோமே. அவளைக் கண்டால் என் கைகள் என்னையுமறியாமல் அவளை தழுவ தாவுமே, எப்படி சமாளிப்பேன். (முல்புலைச் செடியைப் பார்த்து) இதே முல்லைச் செடிக்குக் கீழே தான் நாங்கள் உட்கார்ந்து காதல் மொழி பேசிக் கழித்தோம். இங்குதான் எங்கள் காதல் ஆரம்பித்து வளர்ந்தது. (விதவைக்கோலத்தோடு சந்திரா வருகிறாள்) சந்திரா! கண்ணே! (பிடிக்க ஓடுகிறான்)

சந்: தொடாதீர்கள் என்னை. நான் உங்களை சகிக்கமுடியாத துன்பத்திலாழ்த்தி விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.
சாம்: கவலைப்படாதே சந்திரா !
சந்: உங்களை ஏமாற்றி விட்டேன்.
சாம்: அதனாலென்ன?
சந்: எவ்வளவு வெள்ளை உள்ளம்.
சாம்: நெடுநாட்களாக பிரிந்திருந்த இருமணமும் ஒன்றுசேர்ந்தால் அனுபவித்த இன்னல்கள் கணத்தில் மறைந்து விடும் சந்திரா.
சந்: ஜெமீன்தார் பின் சென்றாள். இப்போது தங்களோடு சேர்ந்து கொஞ்சுகிறாளென்று ஊர் பேசும். வேண்டாம். சாம் — இரும்போடு ஒன்றிவிட்ட காந்தத்தை பிரிக்கமுடியுமா சந்திரா, இருளுக்குள் மறைந்த சந்திரன் போல உன் மொழி மறுக்கிறது. ஆனால் உன் விழி அழைக்கிறது. கண்ணே இந்த ஏழைக்கு இறங்கு.
சந் — சிங்காரவேலர் ஏழையாகிவிட்டார். நல்லூராரை என் மனதால் விரும்பிபோகவில்லை. இதை தங்களிடம் கூற வேண்டுமென்றுதான் இங்கு வரவழைத்தேன்.