பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

வாஞ்: நீர்தானே ஓய் வம்புக்கு வந்தீர்.
(அவ்வழியே வந்த வீரன்)
வீரன்: இங்க வாங்கய்யா! இப்ப நீங்க ரெண்டுபேரும் மண் சாப்பிடணும்.
வாஞ்: மண்ணா? எதுக்கு?
வீரன்: அரியும் சிவனும் ஒன்னு. அத அறியாதவன் வாயில் மண்ணு!
(இருவரும் விழித்தபடி செல்கின்றனர்)

—-◯—


(சிங்காரவேலர் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார். வாஞ்சிநாதர் வந்து)
வாஞ்: என்ன முதலியார்வாள்! அப்படியே லயத்துட்டீரே அது என்ன பாகவதமா?
சிங்: கும்பாபிஷேக வரவு செலவு கணக்குயா. வயிறு எறியுது. மூவாயிரம் ரூபா செலவாகியிருக்கு.
வாஞ்: ஏழெட்டாயிரம் செலவழிஞ்சுட்டதா சொன்னீரே.
சிங்: வயிறு எறியுது. அடுத்த வெள்ளிக்கிழமை லட்சதீபம் வேற ! அது சரி இப்ப எங்கே வந்தீர்?
லா: நல்லூர் சம்பந்தம் முடிந்ததானா பகவானுக்கு ஆயிரம் ரூபாயில் அபிஷேகம் செய்துவைக்கிறதாக நான் பிரார்த்தனை செய்துண்டிருந்தேன். பகவானோட கிருபாகடாட்சத்தாலே நல்லூர் சம்பந்தம் ஏற்பட்டு, கோயில் திருவாபரணம் செய்யும் சௌகரியமும் ஏற்பட்டு உமக்கு வந்த ஆபத்தும் ஒழிஞ்சுபோச்சு பாருங்கோ அதனாலே ஒரு ஆயிரம் ரூபா கொடுத்தா அபிஷேகத்தை ஜாம்ஜாம்னு நடத்திடுறேன்.
தந்தி பியூன்: (வந்து) சார் தந்தி! (முதலியார் வாங்கினார்)
வா: மாப்பிள்ளை வர்ரதுக்கு தந்தி கொடுத்திருப்பர்.
சிங்: (தந்தியை படித்துவிட்டு) ஆ! அடப்பாவி! அய்யய்யோ (அலறுகிறார்) என் மகளுக்கு ஒரு குறைவும் வராதென்று சொன்னாயேடா பாவி பிராமணா! கல்யாணம் செஞ்சு ஒரு மாதங்கூட ஆகவில்லையே! போய்விட்டானாமே என் மருமகன். அய்யோ?
(வஞ்சிநாதர் நழுவி விடுகிறார்)