பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

வெள்: அவருக்கு அவக அப்பா சொன்னாருங்களாம்.
மாயே: அவரு பார்த்தாராம்மா?
வெள்: தெரியாதுங்க எசமான்.
மாயே: அது சரி! இந்த அஞ்சு பேருக்கும் பெண்டாட்டி யாருடா?
வெள் : திரௌபதையின்னு பேருங்க.
மாயே : அதுதாண்டா சொன்னேன். அஞ்சுக்கு ஒன்னு லிமிடெட்டுன்னு. நான் ஒருத்தன் தானடா. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலேயடா. நான் எப்படிடா தர்மராவேன்? என்னை எல்லாரும் புகழ்றாகன்னா உண்மையா நடக்கிறாரு — ஊருக்கு உழைக்கிறாருன்னுலடா சொல்லணும். இனிமே யாரும் என்னை தர்மராசான்னு சொன்னா அப்படிச் சொல்லக் கூடாதுன்னு சொல்லு.
வெள்: ஆகட்டுங்க எசமான்.
மாயே: கடைவீதியிலே யாருட்டயோ சொன்னியாமே — எங்க எசமான் ஊருக்கு நல்லதுதான் செய்கிறாரு. ஆனா கோயிலில இருக்கிறதெல்லாம் கல்லுன்னு சொல்றாருன்னு சொன்னியாமே! அப்படியா சொன்னே? கோயில்லே கல் இல்லாம வேறே என்னடா இருக்கு?
வெள் : சாமிதானுங்க எசமான் இருக்கு.
மாயே: சாமியா? இங்க வாடா. (வருகிறான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்குடா. கையை இப்படி வைடா. (நடராஜர் சிதம்பரத்திலிருப்பதுபோல் நிற்கச் செய்கிறார். நிற்கிறான் வெள்ளை. பத்திரிகை படித்துக்கொண்டிருக்கிறார் மாயேந்திரன். (வெள்ளை காலை ஊண்டுகிறான்) டேய் தூக்குடா காலை. நில்லுடா.(மறுபடியம் காலை தூக்கி சிறிது நேரம் நின்றுவிட்டு காலை ஊண்டுகிறான்) டேய் ஏண்டா ஊண்டுன? தூக்குடா காலை.
வெள்: கால் வலிக்குதுங்க எசமான்.
மாரம்: ஏண்டா ரெண்டு நிமிஷம் நிக்கிறதுக்கே கால் வலிக்குத்துன்னு சொல்றியே — அப்பத் தூக்கின காலை இன்னும் கீழே ஊண்டாமே இருக்குதேடா.
வெள் : எங்கே எசமான்?


சந்-4.