பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

மாயே: சிதம்பரத்திலே.
வெள்:அது கல்லு எசமான்.
மாயே : என்ன அது கல்லா? ஏண்டா கல்லுண்ணு சொன்ன? கல்லை கல்லு நீ சொன்னா என்ன? — நான் சொன்னா ஏனடா எசமான் கல்னு சொல்றாருனு எல்லார்கிட்டேயும் போய் சொல்ற?
வெள்: இனிமே சொல்லமாட்டேனுங்க எசமான்.
மாயே: யாரோ ஒரு கடைக்காரர்கிட்ட சொன்னியாம் எங்க எசமான் சாமியே கும்பிடமாட்டேங்கிறாருன்னு
வெள்: நீங்க எப்ப எசமான் கும்பிட்டீங்க?
மாயே: நான் சாமி கும்பிடாமே இருக்கிறேன்னு உனக்குத் தெரியுமா? நான் கும்பிடுகிற சாமியே வேறடா. அது சரி. நீ எந்த சாமிய கும்பிடச் சொல்ற? சொல்லு.
மாயே: பரமசிவனையா? ஏண்டா—அவர் தாருகா வனத்து ரிஷிகள சோதிக்கிறேன்னு சாக்கு வச்சிக்சிட்டு, அங்கே எத்தனை ரிஷி பத்தினிகளோட கற்பைக் கெடுத்தாரு? இப்ப நாமும் அவரைக் கும்பிடுறோம்னு வச்சுக்க. நம்ம பக்தியையும் சோதிக்கனும்னு அவர் ஏற்பாடு பண்ணி நம்ம வீட்டுக்கும் வந்துட்டாருனா என்னடா செய்கிறது? வேண்டாம்டா வேண்டாம். வேறே சாமிய சொல்லு.
வெள்: மகா விஷ்ணுவ கும்பிடலாம்ல எசமான்.
மாயே :அவரு எப்பவோ போய் ஆழ்கடல் மத்தியில் துயிலப் போனவரு இன்னைக்கு வரைக்கும் எழிந்திருக்கவே இல்லையேடா. அவருக்கு நம்ம கும்பிடுறதெல்லாம் எங்க தெரியப் போகுது? வேற சாமி சொல்லு.
வெள் : விநாயகரைக் கும்பிடலாம்ல எசமான்.
மாயே: ஏண்டா ஒரு மனுஷன் சாமி கும்பிடனும்னா தன் தன் குடும்ப கஷ்டம் தீரணும்னுதானடா கும்பிடுவான். விநாயகருக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே. அவருக்கு எப்படிடா குடும்ப கஷ்டம் தெரியும்?
வெள்: சுப்பிரமணியரைக் கும்பிடலாங்களே.