பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

மாயே : அது சட்ட விரோதமான சாமியாச்சே!
வெள்: ஏனுங்க?
மாயே: நம்ம கவர்ண்மெண்டுல ஒரு பெண்டாட்டி இருக்கும்போது ரெண்டாவது கல்யாணம் செய்யக்கூடாதுன்னு சட்டம் இருக்கு. சுப்பிரமணியருக்கோ வள்ளி- தெய்வயானையின்னு ரெண்டு பெண்டாட்டி இருக்கு. சட்ட விரோதமான சாமிய கும்பிடக் கூடாதுடா. வேண்டாம். நல்ல சாமியா- நாணயமான சாமியா பார்த்து சொல்லு. நான் கும்பிடுறேன்.
வெள் : அப்படிப்பட்ட சாமி ஏதுங்க எசமான்.
மாயே: நம்மசாமி, சிறுத்தொண்டன் கிட்ட பிள்ளைக்கறி கேட்டுச்சே. முஸ்லீம்களோட சாமியப் பார்த்தியா யார்கிட்டேயாவது அரை பிளேட் பிரியாணியாவது கேட்டதாக கேள்விப்பட்டிருக்கிறியா?
வெள்: இல்லைங்க. இனிமே இந்த சாமிகள் கும்பிடலீங்க.
மாயே; கடைவீதியில் இப்படியே போய் கிழக்கே திரும்பின உடனே ஒரு கோவில் இருக்கே — அங்கே எதுக்குப் போன? வெள் : சும்ம்மா அப்படியே ...
மாயே : போனியா?
வெள் : போனேன்.
மாயே: எதுக்குப்போனே? அங்கே போய் விழுந்து கும்பிட்டியில.
வெள் :ஆமாங்க.
மாயே: கோவிலுக்கு எதுக்குப் போறது? பணம் இருக்கிறவக போக வேண்டியதுதான். இல்லாதவக எதுக்குப் போகணும்? செய்த பாவங்களைப் போக்கிக்கொள்றதுக்காகத்தான் கோவிலுக்குப் போகிறோம்னு சொல்லிக்கிடுறாக. அப்படியினா நீ என்ன பாவம் செய்த கோவிலுக்குப்போக. நீ ஒரு பாவமும் செய்யாதவன்தானே. பணக்காரங்க எத்தனையோ ஏழைகளை மோசம் செய்து பணத்தை சேர்க்கிறாக— அவக அந்த பாவத்தை