பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தொலைக்க ஆயிரக்கணக்கா செலவு செய்துக்கிட்டுப் போறாக. வெள்ளை நீயும் துணிஞ்சு ஒரு பாவம் செய். அத தொலைக்க ஆயிரம் ரூபாய் செலவு செய்யப் போ. கோவில் ஒரு விபசார விடுதியினு உலக உத்தமர் காந்தியாரே சொல்லியிருக்காரு போ — போய் வேலைகளைக் கவனி.

(வெள்ளை போய் திரும்பி வந்து)


வெள் :எசமான்! உங்களைப் பார்க்க மார்வாடி வர்ரான்.
மாயே: நம்ம கடன் கொடுக்கிறவகதான். வாங்கிறதில்லையே. சிரிச்சிக்கிட்டு வந்தான்னா சிரிச்சிக்கிட்டே வரச்சொல்லு, முகத்தை சுளிச்சிக்கிட்டு வந்தான்னா சுளிக்காம வரச்சொல்லு. (பரமதயாளு சேட் வருகிறான்)
ஜெமீன்தார்ஜி! நமஸ்காரம்ஜி. நிம்மல் பேரு பரம தயாளு சேட்!
மாயே : வெள்ளை. நேத்து மூணாவது தெருவில் பாம்பு கடிச்சு யாரோ செத்துட்டாகன்னு சொன்னியே--அது என்ன பாம்பு கடிச்சது?
வெள் :நல்லபாம்புங்க.
மாயே : இவன் பேரு பரம தயாளு. பாம்பாவது கடிச்சாத் தான் விஷம். இவனைக் கண்டாலே விஷம்டா. மில் தொழிலாளிகளுக்கு பணம் தாரோம்ல. அதை கொடுக்கக் கூடாதுன்னு சொல்ல வந்திருக்கான்.
பர :ஆமாஜி அவங்களுக்கு நீர் உதவி செய்யாம இருந்தா உமக்கு லட்ச ரூபாய் சும்மா தர்ரான்.
மாயே : அந்த ரூபாயை அவர்களுக்கு கொடுப்பதுதானே.
பர: அவர்களுக்கு எல்வளவுதான் கொடுக்கிறது?
மாயே: தேவைக்குத் தகுந்தபடி கொடுத்தால் என்ன? சக்தியை உனக்குத்தானே செலவு செய்து உழைத்துத் தருகிறார்கள். ஏழைகளின் கண்ணீர் உனக்குப் பன்னீர். அவர்களை வஞ்சித்தால் இரண்டாயிரம் ஈட்டிகள் சேர்ந்து உன் நெஞ்சில் குத்தும் என்பதை மறவாதே. வெள்ளை — வஞ்சனையின் உருவத்தைப் பார்த்தாயா. இவன் கட்டி இருக்கிற துணி ஒன்னே முக்கால் ரூபாய்னா