பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

அவன் திருடியிராவிட்டால் ஏன் ஊரைவிட்டு ஓடுகிறான்? ஓடியிருக்கவேண்டியதில்லையே. அதன் பின் அழகூர் மடத்திலே லட்சக்கணக்கான பணத்தையும் ஆபரணத்தையும் கொள்ளையிட்டு பெரிய ஜமீன்தாரராக ஆகிவிட்டான்.

கோ: தங்கள் குரல்கூட என் நண்பன் துரைராஜ் குரல் போலவே இருக்கிறது.

மா: துரைராஜே பேசும்போது எப்படி இருக்கும் கோதண்டம்?

கோ: துரைராஜா ! என் நண்பன் துரைராஜா! துரைராஜ்! (தழுவிக் கொள்கின்றனர்)

மா: கோதண்டம் சூழ்ச்சிக்காரர்களிடம் சிக்கிக் கொண்டேன். கள்வனாக்கப்பட்டேன். அதிலிருந்து தப்பி ஓடினேன். அழகூர் மடாதிபதியை ஒழிக்கும் வேலை எனக்கு வலிய வந்தது. அதை பயன்படுத்தி அங்கிருந்த பொருள்களோடு மாயேந்திரன் என்ற இந்தக் கோலத்தோடு எப்படியும் நம் பணிகளை நிறைவேற்ற வேண்டுமென்று மறுபடியும் இங்கு வந்தேன். வந்த தாளிலிருந்து உன்னை சந்திக்கவேண்டுமென்று முயன்று வந்தேன். சந்தர்ப்பம் சரியில்லாமலிருந்தது. பணத்6தைக் கொண்டு நம் திட்டங்களை எளிதில் நிறைவேற்றி விடலாம். உனக்கு தெரியும் நான்செய்து வரும் காரியங்கள் எல்லாம், சாம்பசிவம் எப்படி இருக்கிறான்?

தோ: சுகமாகத்தானிருக்கிறான். ஆனால் சிங்கார வேலர்.

மா: சிங்காரவேலா ஏழையானது எனக்குத் தெரியும். ஆனால் நான் தான் துரைராஜ் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம் - நம் லட்சியங்கள் நிறைவேறும் வரை