பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

சிங்:உண்மைதான் இந்த ஊர் கோயில் தர்மகர்த்தா.

மா: தாங்கள் தானும். ஆனால் தங்கள் பக்தியும் பிராமண சேவையும் தங்களுக்கு ஒரு பயனும் தரக்காணோமே. தங்கள் மகள் சந்திரா-பாவம் தாலி அறுத்துவிட்டாள்...

சிங்: ஆமாம்! தலைவிதி.

மா: அந்தத் தலைவிதியைக்கூட உமது பக்தியும் பிராமண சேவையும் போக்க முடியவில்லை. பிறகு என்ன பிரயோஜனம்?

சிங்: இதைப்போலதான் பேசுவான் துரைராஜ்.

மா: அவனைத்தான் அடித்து துரத்தியாச்சே.

சிங்: ஜெமீன்தார்வாளுக்கு அவனைத் தெரியுமோ?

மா: ஏன் தெரியாது. துரைராஜ் இப்போது உம்மைப்பார்த்தால்......

சிங்: காரி உமிழ்வான்.

மா: துரைராஜ் அப்படிப்பட்டவனல்ல. உம்மிடம் பரிதாபம் காட்டுவான் . சிங்: துரைராஜ் பேசுவது போலவே இருக்கிறது.

மா: இருக்கட்டும் நானேதான் துரைராஜ் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சிங்: என்ன?

மா: ஒப்புக்கு!

வெள்ளை: (வந்து) எசமான். வாஞ்சிநாதர் சாஸ்திரி வந்திருக்கிறார்.