பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சிங்: வாஞ்சிநாத சாஸ்திரியா இங்கு எதற்கு வந்தான்?

மா: பார்ப்பணணை நம்பியிருந்தீரே. பாரும் அவன் புரட்டை வாஞ்சிநாதரின் வஞ்சகம் எந்த அளவுக்குச் செல்கிறது என்பதைக் காட்டுகிறேன். அதோ அந்த திரைக்குப் பின்புறம் சந்தடி செய்யாமல் இருந்துகொண்டு நாங்கள் பேசுவதைக் கேளும். (போய் மறைந்து கொள்கிறார் சிங்காரவேலர் )

மா- (வெள்ளையிடம்) வரச்சொல்.

வாஞ்- (சிரித்தபடி) நமஸ்காரம் ஜெமீன் தார்வாள்! ஆத்துல குளிச்சுண்டிருந்தேன்

வெள்: எசமான்! பொய்! பொய்! வீட்டுலதான் குளிச்சுக்கிட்டிருந்தார்.

வாஞ்: ஜெமீன்தார்வாள் கூப்பீட்டதா வந்து சொன்னான் ஓடி வந்தேன்:

மா: என்ன வாஞ்சிநாதரே! வாரம் இரண்டாகிறது. நம்ம விஷயத்தை மறுந்துட்டீரே,

வாஞ்: எதைச் சொல்றேன் ஜமீன்தார்வாள்.

மா: சந்திரா விஷயம் தானைய்யா.நான் குறி வைத்தால் தப்பக்கூடாது

வாஞ்: சற்று சிரமமாக இருக்கிறது.
(உள்ளேயிருந்து சிங்காரவேலர் உறுமுகிறார்)

வாஞ்: என்ன சப்தம்?

மா: ராஜபாளையத்துலேயிருந்து ஒன்னு கொண்டாந்திருக்கு அது !

வாஞ் : ஓஹோ!

மா: என்னய்யா இழுத்துப் பேசுகிறீர் இரண்டு கைகளையும் நீட்டி ரூபாய் இரண்டாயிரம் வாங்கியிருக்கிறீர். நானும் சிங்காரவேலர் இல்லை ஏமாறுவதற்கு.

வாஞ்: நான் மறுப்பேனா?

மா: என்னய்யா - என்னைவிட அந்த சிங்காரமுதலி மேலானவனா?