பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 சாம்: விஷம் சாப்பிட்டு விட்டாயா? துரைராஜ்! என்ன. காரியம் செய்து விட்டாய்?

மா: கடைசி நேரத்தில் உன்னிடம் எல்லாவற்றையும் கூறி விட வேண்டுமென்றுதான் உன்னை அழைத்து வரச் சொன்னேன். நண்பா ! கடைசி தடவையாக உன் கையால் கொஞ்சம் தண்ணீர் கொடு. (தண்ணீர் கொண்டுவந்து தருகிறான்)

மா: சாம்பசிவம்! நீயும் தமிழன்! நானும் தமிழன் ! நமக் குள் எந்தவிதமாக ஒரு நீங்காத நட்பு ஏற்பட்டதோ அதேபோல் தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ நேரும் வரை ~புத்துலகக் கழகத்தின் வேலை தொடர்ந்து நடைபெற வேண்டும். என்னிடமுள்ள சொத்துக்கள் முழுவதயும் பகுத்தறிவுப் பிரசாரத்திற்கே பயன் படுத்து, இதோ இங்கு கிடக்கும் வாஞ்சிநாதர் பிணம் நாளை குளத்தில் மிதக்கும். நான் இங்கு பிண மாகிக் கிடப்பேன். வாஞ்சிநாதரைக் கொன்றது நான் தான் என்றும் ~நான்தான் துரைராஜ் என்றும் போலீசாருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன், இதைக் கொடுத்து விடு, தமிழன் தமிழனுக்காகவே வாழ வேண்டுமென்ற உணர்ச்சியை ஏற்படுத்து

சாம் : துரைராஜ் நீ சாகக்கூடாது.உத்தமனே நீ சாகக்கூடாது.

மா: விஷம் விட்டு விடுமா. கவலைப்படாதே சாம்பசிவம். நான் ஒருவன் போனால் என்ன. எனக்குப்பின் என்னை விட மேலாக உழைக்க த்தனையோ பேர் இருக்கிறார்கள். எனக்கு விடை கொடு... வருகிறேன். வணக்கம். (சாம்பசிவத்தின் அணைப்பிலிருந்தவாறு உயிர் பிரிகிறது)

சாம் : துரைராஜ்! துரைராஜ்(அழுகிறான்) இப்போதே உறுதி எடுத்துக்கொள்கிறேன். மக்களை வஞ்சகர்களிடம் சிக்க வைத்து. அவர்தம் மதியை மாய்த்து, சமூகத்தை சீரழிக்கும் பார்ப்பனீயத்தை ஒழிக்கும் பணியாற்றுவேன். நீ துவக்கி வைத்த வேலையைத் தொடர்ந்து செய்து வருவேன். இது உறுதி! (துரைராஜ் கால்களைத்தொட்டு கண்களில் ஒத்திக் கொள்கிறான்)