பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

போனேன். அவர் சிங்காரவேல் முதலியாரைப் பற்றி ஏதேதோ கேட்டார். நான் உண்மைகளையும்—பொய்களையும் கலந்து சொல்லிண்டிருந்தேன். சிங்காரவேல் முதலி அங்கே ஒழிஞ்சிண்டிருந்திருப்பான் போல—நேக்கென்ன தெரியும்? திடீர்னு ஓடிவந்து என் கழுத்தை நெறிச்சு——

துரைராஜ்: இந்த நாட்டு மக்கள் மக்களாகவே வாழ வேண்டுமென்று விரும்பினேன் புத்துலகக் கழகம் அமைத்தேன். சாம்பசிவம் போன்ற நண்பர்களை உதவிக்கு வைத்துக் கொண்டேன்.பணியாற்றப் புறப்படும் பாதையில் வைதீகப் புயல் வீசத் தொடங்கிற்று. பார்ப்பனீயம் என்ற பாம்பு படமெடுத்தபடி பயமுறுத்தியது. திருடனாக்கப்பட்டேன். ஊரை விட்டு ஓடினேன். வழியில் இரண்டு காவி கட்டிகள் தன் குருநாதரான அழகூர் மடாதிபதியை ஒழித்து தங்களை அந்த ஸ்தானத்திற்கு வைத்தால் எல்லா உதவிகளையும் செய்வதாக கூறினார்கள். அதன் மூலம் “நான் ஒருநாள் மடாதிபதியாகி” அழகூர் மடாலய சொத்துக்கு அதிபதியானேன். மறுநாள் என் வேஷங்களை கலைத்து விட்டு சிறிது சொத்துடன் மாயேந்திரனாக மாறி அந்த ஊரைவிட்டு என் சொந்தஊர் திரும்பினேன். விட்டுப்போயிருந்த என் பணிகளை பணத்தின் துணைகொண்டு மிகு எளிதில் முடித்தேன். என் வேலை முடிந்தது. நாடு திருந்தியது. நான் வருகிறேன்.

கோதண்டம் — தங்கவேல், நாங்கள் என்னகூறப்போகிறோம். உங்களது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. உங்கள் கவனம் அடுத்தடுத்து பக்கங்களைப் புரட்டிப் படிப்பதில் செல்லட்டும், வணக்கம்!

[சாம்பசிவத்தின் தாய் வேதம்மாள் சிங்காரவேலர் வீட்டிற்குள் வந்து வேலைக்கார வீரனிடம்]

வேத: எசமான் எங்கப்பா?