பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

வீரன்; வாங்கம்மா! (செறுமல் சத்தம் கேட்கிறது) யாணை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னேன்ன மாதிரி வந்துக்கிட்டிருக்காரம்மா, உட்காருங்கம்மா, காலம் மாறிப் போச்சு

சிங்: காலம் ஒன்னும் மாறலடா. அது சுத்திக்கிட்டுத்தான் இருக்கு. மனுஷன்தான் மாறிப்போறன்,ஓர் வேதம் மாவா? வா வா-எங்கே வந்தே? டேய் வீரா! பூஜை ரூம்ல பழம் இருக்கு - எடுத்தாந்து வேதம்மாவுக்குக் கொடு.

வீர: சரிங்க (போகிறான்)

வேத: இப்ப எனக்கு எதுக்குங்க பழம்?

சிங்: சும்மா வாங்கிக்க வேதம்மா பகவத் பிரசாரமாச்சே!

வீர: அங்கே பழம் இல்லிங்களே.

சிங்: போடா முட்டாள், அங்கே வச்சிருந்த பழம் எங்கடா போச்சு? (மடியை தடவியபடியே ) ஓ! மடியிலே இருக்கா? இந்தா! (வேதம்மாள் வாங்கிக்கொள்கிறாள்) வந்த விசேஷம் என்ன? பணம் எதுவும் கடன் வேணுமா? கேளு! ஒரு மூட்டை பண மிருக்கு. நீயோ உறவுமுறை பணம் துட்டு இல்லையினா தாராளமா கேளு.

வேத: கடவுள் புண்ணியத்தால் பணம் இருக்குதுங்க! சாம்பசிவம் பிள்ளையாண்டானுக்கு கல்யாணம் செய்யணும். அதுக்கு ஒரு நல்ல இடமா பாத்து நீங்கதான் ஏற்பாடு பண்ணனும், நாங்கல்லாம் வாழ்ந்து கெட்டவக.

சிங்:என்ன வேதம்மா இப்படிப் பேசுற! நான் ஒருத்தன் எதுக்கு இருக்கேன்.