பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

வீர: மொட்டை அடிக்க!
சிங்: என்னடாது?
வீர: முனியாண்டி கோயிலில் போய் பிள்ளைக்கு மொட்டையடிக்க போறானாம் எசமான்.
சிங்: அது சரி வேதம்மா. கலியாணத்துக்கு பணம் ரொம்ப வேணுமே. எவ்வளவு வச்சிருக்கே?
வேத: ரெண்டாயிரம் ரூபாய்க்கு அந்த நஞ்சையை வித்துட்டேனுங்க. சிங்: அது ரெண்டாயிரம் தானா தேறும்? மூவாயிரம் தேறுமே.
வேத:அவரு மூவாயிரத்தி ஐநூறுக்கு வாங்கினாறு.என்னங்க செய்கிறது. ஜோசியரு சொன்னது சரியா போச்சு.
சிங்: ஆ! என்ன சொன்னாரு?
வேத: அந்ந நிலம் வச்சிருக்கிறவக விளங்கமாட்டாகன்னு சொன்னாரு, சரியாதானுங்களே போச்சு! அதை வாங்கின மூனாவது மாதமே போயிட்டாருங்களே கப்பல் கடல்ல கவிழ்ந்த மாதிரி. (கண்ணீரை துடைக்கிறாள்)
சிங்: அடடே! நல்ல விஷயத்தைப்பற்றி பேசிக்கிட்டிருக்கும் போது அதையெல்லாம் பேசாதே வேதம்மா.
வேத: பணத்தை உங்ககிட்ட கொடுத்து வைக்கத்தானுங்க வந்தேன். பணத்தை நீங்களே வச்சிருங்க. வீட்டில் இருந்தா அஞ்சும் பத்துமா எடுத்து பையன் செலவழிச்சிடுவான்.
சிங்: அதை எப்படி வச்சிருக்கிறது வேதம்மா, பேங்கில போட்டு வச்சாலாவது வட்டி கிடைக்கும். எனக்குத் தெரிஞ்ச பேங் ஒண்ணு இருக்கு சீட்டுத் தர்ரேன். அதுல போட்டு வை.
வேத: பேங்கில போட்டு வச்சா நினைச்ச நேரத்துக்கு பணம் வாங்க முடியாதுங்க. அதுலபோட ஒரு மனுவாம். எடுக்க ஒரு மனுவாம். இதெல்லாம் யாராலே முடியும்? இப்ப உங்ககிட்ட நான் என்ன வட்டியா கேட்கிறேன்?