பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகவுரை

மனிதன் நிலையாக வாழ்வதற்கு, சமயங்கள் முயன்றன. மனிதனுடைய வாழ்ககையை மூவகையாகக் கூறலாம் அவை உடலால் வாழும் வாழ்க்கை, உள்ளத்தால் வாழும் வாழ்க்கை உயிரால் வாழும் வாழ்க்கை எனலாம். மூன்றும் இணைந்த வாழ்க்கையை வார்ப்பதற்கு, எல்லாச் சமயங்களும், தங்களால் இயன்ற பங்கினை செய்தன செய்து வருகின்றன. செய்யப்போகின்றன இதை நாம் ஒரு இயக்கம் என்று கூறுகிறோம். தமிழகத்தில் பக்தி இயக்கம் 4ம் நூற்றாண்டில் தொடங்கியது மலையாள நாட்டில் நாராயண குரு என்பவர் ஒருவர் வாழ்ந்தார். அவர் தமிழ் மொழியில் உள்ள தேவாபர திருவாசகங்களை எல்லாம் மலையாள மொழியில் எழுதி வைத்திருக்கிறார். இராமலிங்க சுவாமிகள், தாயுமானவர் பாடல்கள் கன்னட நாட்டில் கன்னட எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மொழி இலக்கியங்கள் பல அவ்வாறு எழுதப்பட்டுள்ளன. இந்த நிலையை தெலுங்கு மொழியிலும் நாம் பார்க்கிறோம்.

சில ஆண்டுகட்கு முன், போலந்து நாட்டிற்குச் சென்ற போது, அங்கே திருமுருகாற்றுப்படை, திருப்பாவை, திருவெம்பாவை இவற்றையெல்லாம் போலிஷ் மொழியில் மொழிபெயர்த்து, வெளியிட்டு இருக்கின்றார்கள். மொரீஷியஸிற்குச் சென்றபோது, அங்கே சைவக் கோயில்கள் பலவற்றை நிறுவி தேவாரம் திருவாசகம், இவைகளை எல்லாம் படித்துவருகின்றார்கள். இதைக் கூறுவதற்குக் காரணம், பக்தி இயக்கம் என்ற ஒன்று எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் அமைந்து வருகின்ற ஒன்று இங்கே நம்முடைய தமிழ் மொழிக்கு எல்லா சமயங்களும், தங்களால் இயன்ற நிலையில் மொழி இலக்கியம், சமுதாயம், இந்த மூன்று நிலைகளின் வளர்ச்சிக்கு துணை புரிந்து கொண்டு வரு