பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 10

“உள்ளம் உவப்புறு தேனை உயிர்க்
                               குயிரை உலவாத
உள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவை
                               மிசை கண்டேனே”

என்று பாடுகிறார்.

கொடூரமான காட்சிக்குள்ளே இனிய காட்சி ஒன்றை தெள்ளமுதை-தீங்கனியை அவர் சிலுவையில் காண்கிறார் முரண்பாட்டு உண்மை ஒன்றை ஆழ்ந்த நோக்கில் கண்டவராய் அதை அழகிய தொடர்களால் எடுத்துரைக்கிறார்.

அவரைப் பொறுத்தவரையில் சிறுமை-பெருமை எனற இரண்டும் சிலுவையில் தனித்தனியே காட்சி தரவில்லை. அறுமைக்குள்ளே பெருமை அடங்கி நிற்கவுமில்லை. சிறுமையே பெருமை என்பதை அவர் கண்டுணர்ந்து கொள்கிறார் தோல்வியே வெற்றி, அழிவே வாழ்வு என்று முழங்கும் வகையில் இப்பாடலை எழுதுகின்றார்.

இம்முறையில் இலக்கிய இன்பத்தை வாரி வழங்கும் பல்வேறு படைப்புகளை உருவாக்கியதோடு அமையாது இலக்கணச் செழிமைக்கும் மொழிச் சீர்மைக்கும் ஆக்கத தொண்டாற்றியவர்கள், ஆற்றி வருபவர்கள் கிறிஸ்தவத் தமிழர்கள்

இவ்வாறு பல்வேறு சமயத்தவர்களின் இலக்கியங்களை ஒருமைப்பாட்டுணர்வோடு ஆராயும் வாய்ப்பை ஏற்படுத்திய திரு மணவை முஸ்தபா அவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர் ஆவார். இத்தொகுப்பு தமிழின ஆக்கத்திற்கு கிறிஸ்தவத் தமிழர்கள் உட்பட பல்வேறு சமயத்தவர்கள் ஆற்றியுள்ள தொண்டை ஓரளவு ஆழமாகவே அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பை வழங்குகிறதெனலாம்.

அருள்திரு டாக்டர் தி. தயானந்தன் பிரான்சிஸ்