பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறப்புரை

இலக்கிய ஆய்வு என்று வரும்பொழுது அஃது வெறும் கலைச் சுவைக்காக மட்டும் என அமைவது கூடாது. ஏனெனில் வாழ்க்கை என்பதன் வெளிப்பாடுதான் இலக்கியம். இலக்கியத்தைச் சுவைக்காக மட்டுமல்லாமல் பயனுக்காகவும் ஆராய வேண்டும்.

அப்படி ஆராயும்போது அந்தந்தக் கால இலக்கியங்கள் ஏன் படைக்கப்பட்டன? எவ்வாறு படைக்கப்பட்டன: என்ற கேள்விகளின் அடிப்படையில் காரண, காரிய விளக்கம் காண முயல வேண்டும். இல்லாவிட்டால் இலக்கிய ஆய்வு பயனற்றுப் போகும்.

இந்தச் சமய இலக்கியக் கருத்தரங்கின் தனிப்பெரும் சிறப்பு, எந்தச் சமய சார்பான இலக்கியங்களைப் பற்றி ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டனவோ, அந்த ஆய்வுரையாளர்கள் அந்தந்த சமயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்.

பல்வேறு சமயங்கள் அல்லது மார்க்கங்களின் அடிப்படைக் கொள்கைகளையும் ஆராய்ந்து அவற்றுக்கிடையேயுள்ள ஒற்றுமைகளையும் அனைத்துச் சமயங்கள் மார்க்கங் களிடையேயான அடிப்படை தனிச் சிறப்புக்களை இனங்கண்டு ஒருங்கிணைத்துப் போற்ற வேண்டும். எடுத்துக் காட்டாக இஸ்லாத்தின் தனிச்சிறப்பு என்னைப் பொறுத்தவரை அருவ வழிபாடு, கிறிஸ்தவத்தின் தனிச்சிறப்பு கடை-