பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

தேவரும் சொல்லாத விஷயங்களையா நான் எழுதிவிட்டேன்? அவர்களெல்லாம் எழுதுகின்ற பொழுது, இல் வாழ்க்கையிலே இருக்கின்ற ஒருவனுக்கு தந்திர மில்லையா என்று கூட நான் கேட்பது உண்டு.

இன்னொரு இடத்திலே அற்புதமான காட்சி ஒன்றை அமைத்துக்காட்டுகிறார் திருத்தக்கதேவர். ஊடல் ஒன்று ஏற்படுகிறது. ஊடல் எல்லோரிடத்திலும் ஏற்படும் ஊடல் ஏற்படவில்லை என்றால் அது வாழ்க்கையேயில்லை சொல்லுவார்கள் இவர்களுக்குள்ளே சண்டையே வந்ததில்லை’ என்று அதிலென்ன சுவை இருக்கும்? சண்டை வர வேண்டும் அது சமாதானமாக முடியவும் வேண்டும். எப்போதுமே சண்டை என்பதல்ல. ரஷ்யா கூறும் "நாங்கள் போர் தொடுக்கிறோம். போரை நிறுத்துவதற்காக" என்று. ஊடல் இல்லை என்றால் வாழ்க்கையிலே ருசியே இல்லை. ருசியுள்ள சாப்பாடு மாதிரிதான் ஊடல் ஏற்படுகின்றது சீவகனும் என்னென்னமோ வித்தைகளைக் காட்டிப் பார்க்கிறான் ஒன்றும் பயன்படவில்லை. ஊடல் தணியவில்லை. காலிலேயே விழுந்து விடுகிறான், கடைசியாக. எல்லாரையும் காலிலே விழவைக்கிறவர்களும் கடைசியிலே ஓரிடத்திய காலிலே விழுந்து விடுவார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிற மாதிரி காலிலே விழுந்து விடுகிறான். அப்பொழுதும் அவளுடைய ஊடல் தணியவில்லை. ஊடல் தணியாமல் கோபத்திலே முறுக்குடன் இருக்கிறாள். அப்பொழுது கிளிகள் இரண்டு பேசிக் கொள்கின்றன. ‘இவள் பெண்ணா?’ ஒரு கிளி கேட்கிறது. பெண் கிளி கேட்கிறது. “இவள் மனசு என்ன கல்லா? இரும்பா? இவனை என்ன இப்படி பண்ணுகிறாளே?' என்று பெண் கிளி பேசுகிறது. ஆண் கிளி அதற்குப் பதில் சொல்கிறது. “அடியே வாயை மூடு அறிவு இருக்கிறதா உனக்கு?’’

"முற்றும் நீ சொல்லின் நங்கை
மூன்று நாள் அரிசி கேட்டாள்"