பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அந்தப் பெண்கள் அலங்கரிக்கிறார்கள். அலங்கரித்த பெண்கள் தங்களால் அலங்கரிக்கப்பட்ட இலக்கனையைப் பார்ககிறார்கள்.

"வான் மழை கடைக்கண் நோக்கி......"

எல்லாவற்றையும் பார்க்கிறார்கள் கண்ணைப் பார்க்கிறார்கள்; மார்பைப் பார்க்கிறார்கள் ஆலிலைப் போன்ற அடிவயிற்றைப் பார்க்கிறார்கள் கூந்தலைப் பார்க்கிறார்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு இந்தப் பெண்கள் பேசிக் கொள்கிறார்கள். 'அடாடா நான் ஆணாகப் பிறக்க வில்லையே? இவளை அப்படியே அனைத்துக் கொள்வதற்கு' என்று சொல்லி வியப்புற்று நிற்கிறார்கள். நாம் ஆணாகப் பிறந்திருக்க வேண்டும், அல்லது நாம் ஆணாக மாறி இருக்க வேண்டும். அல்லது இனிமேலாவது மாற வேண்டும். இவளை அணைக்க வேண்டும், என்று சொல்லி ஆசைப்படுகிறார்கள், அப்படிபட்ட அழகு என்று சொல்கிறார்.

அழகை வர்ணிக்கிறபொழுது, ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்று கம்பர் ஒரு விதத்தைப் பின்பற்றுவார். பாரதிதாசன் போன்றவர்களோ, தின்பண்டம் கேட்கக் கேட்க குழந்தைகளுடைய கண்கள் தாவித் தாவி இது அது இது என்று அலைகிற மாதிரி அந்த அழகைப் பார்ப்பதற்கு இந்தக் கண்கள் அங்கே, இங்கே என்று அலைந்தன என்று சொல்வார். இங்கே இந்தச் சமண முனிவர் இப்படிக் கூறுகிறார். இந்த முனிவர்களா இப்படியெல்லாம எழுதுகிறார்கள் என்று கூட சமயங்களிலே சந்தேகமா இருக்கும். என்னுடைய நண்பர்கள் கூட சில சமயங்களிலே குற்றச் சாட்டுக்களைச் சொல்லுவார்கள். 'நீங்கள் ரொம்ப அற்புதமாகவும் அதிகமாகவும் காதலை எழுதியிருக்கிறீர்கள்'என்று இளங்கோவடிகளும் திருத்தக்க-