பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

மூலமே கல்யாணம் பண்ணிக்கொண்டு போகிறான். சீவகன் ஒரு பெரிய கல்யாண புருஷனாகவே கதையை வளர்த்துக் கொண்டு போகிறான். இறுதியிலே அவன் வந்த இன்பத்தையெல்லாம் அனுபவித்துவிட்டு அவற்றை எல்லாம் துறந்து வீடு பேறு பெற வேண்டும் என்று சொல்லி முக்தி உலகத்திதிற்குப் போகின்றான் என்று சிந்தாமணியினுடைய கதை முடிகிறது. இதற்கு இடையே சிந்தாமணியிலே நடக்கிற நாடகத்தின் கவிதை நாட்டியங்கள் சாதாரணமானவை அல்ல,

இலக்கனையை ஓரிடத்திலே காட்டுகிறார்கள். இலக்கனையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள், அலங்கரித்து முடித்த பெண்கள் அந்தப் பெண்ணைப் பார்க்கிறார்கள் முதலிலே கண்ணைப் பார்க்கிறார்கள். பிறகு மார்பை பார்க்கிறார்கள். பிறகு அடிவயிற்றைப் பார்க்கிறார்கள். அதற்குப் பிறகு வேறிடத்தில் ஆரம்பிக்கிறார்கள். இப்படிப் பார்த்துக் கொண்டே வந்தவர்கள் மறுபடியும் அவருடைய கூந்தலைப் பார்க்கிறார்கள். கடைசிலே அந்தப் பெண்கள் எல்லாம் பேசிக் கொள்ளுகிறார்கள். அடாடா இப்படி ஆகிவிட்டதே என்று சொல்லிப் பேசிக் கொள்கிறார்கள். ஏன் 'இப்படியாகி விட்டதே' என்று பேசிக் கொள்கிறார்கள்? மணிமேகலையிலே சாத்தனார் பேடியரன்றோ பெற்றியின் நின்றிடின்' என்று சொல்லுவார். மணிமேலை போகிபோது, அவளைப் பார்த்து விட்டு அந்த அழகை ரசிக்காமல் போனால், பேடி மகன் அல்லவா என்கிற விதத்திலே மணிமேகயிைலே சாத்தனார் சொல்வதைப் பார்க்கிறோம்.

"ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடியரன்றோ பெற்றியின் நின்றிடின்"

என்று சொல்லுவார். அதையெல்லாம் விட ஒருபடி விஞ்சி இவர் சொல்லுகிறார்.ரொம்ப அழகாகச் சொல்லுகிறார்.