பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

என்று சொல்லப்படுகிறது. இதே கற்பனையை பின்னாலே கம்பர் எடுத்துக்கொண்டு, இன்னும் அழகாக்குகிறார். அந்தப்பூவை பறிக்க முடியவில்லை; இந்தப்பூவைப் பறிக்க முடியவில்லை ஒன்றைப் பார்த்தால் கைமாதிரி இருக்கிறது. ஒன்றைப் பார்த்தால் கண் மாதிரி இருக்கிறது. ஒன்று முகம் மாதிரி இருக்கிறது. அதைத் தவிர களையையே பார்க்க முடியவில்லை. ஆதலாலே அவர்கள் ஒன்றைக் களைந்தார்கள். எதைக் களைந்தார்கள்? களை, களைதல் என்ற தங்கள் தொழிலைக் களைந்துவிட்டுப் போனார்கள். அப்படி அருமையான கற்பனைகளைக் கம்பனுக்குக் கூட வழங்கியிருக்கிற சிறப்பினை நாம் இங்கே பார்க்கிறோம்.

இன்னும் ஓர் அழகான காட்சி. அந்தக் காட்சியை சொல்ல வேண்டிய கடமை எனக்குண்டு. அநத நாட்டினுடைய சிறப்பைப் பற்றிச் சொல்லுகின்றபொழுது இரண்டு எருதுகள் நிற்கிற காட்சிகளை காட்டுகிறார். இரண்டு எருதுகள் ஒன்றாக நிற்கின்றன. இரண்டு எருதுகளும் சரியான ஜோடிப் பொருத்தம். ஒனறு மாமியார் மாதிரி இன்னொன்று மருமகள் மாதிரி.

மாமனும் மருமகனும்போல் என்று காமனும், சாமனும் கலந்த காட்சியைக் கூறுகிறார். அன்பாய் இருக்கிறதுக்கு அம்மாவையும் பிள்ளையையும் சொல்லலாம் இல்லியா? அம்மா அன்புதானே, அன்புகளிலே உயர்ந்த அன்பு. சில சமயங்களிலே அன்பு, அது வந்து, பெற்ற அம்மாயில்லை, வந்த அம்மாவினுடைய அன்பு. இங்கே வந்து, தாயும் பிள்ளையும் என்று சொல்லவில்லை, ஏனென்றால், இரண்டு எருதும் ஆண் ஜாதி; பெண்ணல்ல. அதனாலே அப்படிச் சொல்லக்கூடாதாம். தாய் என்று சொல்லக்கூடாதாம். சரி அப்படி மாதிரின்னு சொல்லலா மல்லவா? அப்படி சொல்லக்கூடாதாம். ஏனென்றால் அப்பன்கிட்டேயிருந்து வந்தவன்தான் மகன், இந்த இரண்டு எருதும் அப்படியில்லையே, இது எங்கேயோ ஒரு சந்தையிலே வாங்கிக கொண்டு வந்தார்கள். அந்த எருதை