பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

பொற்றா மரைக்குளத் தவளை யாகா துனைப்
புனருதற் கருள் புரியவும்

இறைவனிடம் அருள்வரம் வேண்டுகிறார். கடவுளின் மேன்மையை அறியாத பாவிகளாக மக்கள் இருப்பதை,

அரிசி விலை உலை அறியுமோ?

எனும் வினாவின் மூலம் வெளிப்படுத்துகின்றார்! தவ வேடம் பூண்ட பலர் பொய்யொழுக்கில் வாழ்வதையும் கஞ்சா அபினி, கள் முதலியன உண்டு காலம் களிப்பதையும் காணுகின்ற மஸ்தான் சாகிப்.

கற்பங்கள் உண்டோம் நாமென்றே-வெளி
கஞ்சாவும் அபினியும் தின்றே
துப்புக்கெட் டலையாமல் நின்றே-அருள்
தூயமெய்ஞ் ஞானச் சுடரினைப் போற்றி

வாழ வேண்டுமென வலியுறுத்துகிறார்.

மஸ்தான் சாகிபு தாயுமானவரிடம் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அவருடைய நடையையும் கருத்தையும் பெரிதும் பின்பற்றியுள்ளார். சில அடிகளைத் தனித்துக் கொடுத்தால் இதைத் தாயுமானவர் பாடலா அல்லது மஸ்தான் சாகிபு பாடலா என்று பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு அவை ஒன்றிணைந்து இருப்பதைக் காண முடியும்.

தாயு: ஆழாழி கரையின்றி நிற்கவிலை யோகொடிய ஆலம் அமு தாகவிலையோ?

மஸ்: ஆழாழி தானும் அணைகடவாது ஆனை தனிற் தாழா திலையோஎன் றாயே நிராமயமே!

தாயு: சொல்லால் முழக்கிலோ சுகமில்லை மெளணி யாய்ச் சும்மா இருக்க அருளாய்!