பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

மஸ்: சொல்லுமெய் ஞானச் சுகக்கடலை உண்டு யான்

சும்மா இருக்க அருள் வாய்

இவை போன்றே இன்னும் பல சான்றுகளைக் காட்டலாம். உறுதிப்பாடான செய்திகள் குறித்த மெய்ஞ்ஞானியர் சொற்கள் ஒன்றாகவே அமைந்திருக்கக் காணலாம். உலகம் நிலையாதது என்பதைத் திருவள்ளுவர்,

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைதது இவ்வுலகு

என்றார். இதனையே தாயுமானவர்.

இன்றைக் கிருந்தாரை நாளைக்கி ருப்பரென்று
எண்னவோ திட மில்லையே

என்றார், பத்திரகிரியாரோ,

இன்றுள்ளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே மன்றுள்ளோர் சொலும் வகையறிவது எக்காலம் என்பார். இவர்களின் வழிநின்று மஸ்தான் சாகிபும்,

இன்றுள்ளோர் நாளைக் கிருப்பதுபொய் என்பதை நான்
கண்டுகொண்டேன் ஐயா என் கண்ணே றகுமானே!

எனக் குறிப்பிடக் காண்கிறோம்! மனோன்மணிக் கண்ணியில் மஸ்தான் சாகிபு தன்னை மாப்பிள்ளையாகவும் இறைவனைக் காதலியாகவும் வைத்து,

என்னைவிட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோ உன்றனுக்கே
உன்னைவிட்டால் பெண் எனக்கு உண்டோ மனோன்மணியே!

எனச் சொல்வது கருத்தாழமும் நயமும் நிறைந்த பகுதியாகும்,