பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


சரியை, கிரியை, யோகம், ஞானம் எனச் சொல்லப்படும் நிலைகள் இஸ்லாத்தில் ஷரீஅத்து, தரீக்கத்து, ஹஃகேத்து, மஃரிபத்து எனப்படும். காயல்பட்டினம் நூஹ் லெப்பை ஆலிம் இந்நான்கையும் முறையே விதை, மரம், பூ, கனி என்பார்.

நல்ல ஷரீஅத்து வித்தாச்சு
தலமாம் தரீக்கத்து மரமாச்சு
எல்லை ஹகீகத்து பூவாச்சுது
இலங்கும் கனியாச்சு மஃரிபத்து!

கல்லிடைக்குறிச்சி ஹாஜறுல் அமீது ஷரீஅத் பால் தரீக்கத் தயிர்; ஹகீகத் வெண்ணெய்; மஃபரித் நெய் என்கிறார்.

காயல் நகர் ஷிஹாபுத்தீன் (வலி) அவர்கள்,மார்க்கத்திற்குப் புறம்பான செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறார்.

ஹக்கன் வேதத்தைப் படித்திருந்தும் கொடிய
துரோகங்கள் செய்யலாமோ?
மிக்க குப்பாயம் போட்டிருந்தால் விரும்பிசெய்பாவம்
குறைந்திடுமோ?

எனக் கேட்கிறார். தஞ்சை அய்யம்பேட்டை ஷைகு அப்துல் கனி சாகிபு,

ஆங்காலக் கள்வரெனும் ஐவர்தமை மெய்வாளால்
சாங்காட்டில் வெட்டிச் சயிப்பதினி எக்காலம்

என ஏங்குகிறார்.

இந்த மதத்தில் பெண் சித்தர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. இஸ்லாத்தில் பெண் சூஃபிகளும் இடம் பெறுகின்றனர். தென்காசி இறசூல் பீவி அவர்கள்,