பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

பாரதனில் பர்த்தாவுடன் பதிவிரதையானால்
பாவையரே பாலமது கடந்திருப்பீர்-நாளை
கூருலீன்கள் தோழியாகக் குலாவிடுவார் அங்கே
கோதையரே! குணக்கேடு கொள்ளாதீரிஃதறிந்தே!

எனப் பெண்கள் கணவனுக்கு உண்மையாக நடக்க வேண்டுமென்பதை உணர்த்துகிறார் இளையான்குடியில் தோன்றிய கச்சிப் பிள்ளையம்மாள்.

ஆதி முதலோன் தனை நினைத்து-நிதம்
ஐந்தொகுத்தும் தொழுதே புகழ்ந்து
ஓதி முகம்மது பாதம் அனுதினம்
உகந்து கும்மி அடியுங்கடி-மிக
மகிழ்ந்து கும்மி அடியுங்கடி

என ஞானக் கும்மி அடிக்கிறார். செய்யிது ஆசியா உம்மாள் என்னும் ஞானப் பெண்மணி மெய்ஞ்ஞானத் தீப ரத்தினம். மாலிகா இரத்தினம் என்னும் ஞான ஒளி விளக்குகளை ஏற்றியுள்ளார்.

இஸ்லாமியப் புலவர்கள் தமிழுக்கு மசலா, படைப்போர், நாமா, முனாஜாத், கிஸ்ஸா முதலிய புதிய இலக்கிய வகைகளையும் படைத்துத் தந்துள்ளனர். வினாக்களும் விடைகளுமாகவே அமைந்துள்ள இலக்கியம் எனப்படும் ஆயிரம் மசலா, நூறு மசலா, வெள்ளாட்டி மசலா எனும் இஸ்லாமியத் தமிழ் இவக்கியங்கள் உள்ளன. அப்துல்லா இப்னுசலாம் என்பவர் கைபாறில் வாழ்ந்தவர். யூதர் வழி வந்தவர். சபூர், தவுராத், இன்ஜில் ஆகிய மூன்று வேதங்களையும் நன்கறிந்தவர். நபிகள் நாயகத்தைக் கண்டு ஆயிரம் வினாக்கள் கேட்பேன்; அதற்கு நீர் விடையளித்தால் நானும் என் நகரில் உள்ளாரும் இஸ்லாத்தை ஏற்போம்! எனச் சொல்லி ஆயிரங் கேள்விகள் கேட்கப் பெருமானாரும் உரிய மறுமொழியளித்தார். அப்துல்லாஹ்வும் அவரது இனத்தாரும் இஸ்லாத்தில் சேர்ந்தனர். அப்துல்லாஹ் வினவிய வினாக்களும், பெரு-