பக்கம்:சமணமும் தமிழும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

சமணமும் தமிழும்


ஒழிந்த ஏனைய மதங்கள் எல்லாம் ஏகாந்தவாத மதங்கள். சமணம் ஒன்றே அநேகாந்தவாதத்தைக் கூறுவது. ஆகவே, இந்த மதத்திற்கு அநேகாந்தவாத மதம் என்று பெயர் உண்டாயிற்று ஸியாத்வாதம் என்றாலும் அநேகாந்தவாதம் என்றாலும் ஒன்றே. அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவது சமணர் வழக்கமாதலின் சமணருக்குப் பிண்டியர் என்னும் பெயர் கூறப்படுகிறது.

சமண சமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்திலே பரவச் செய்வதன் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் என்னும் பெரியார்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள் என்பது சமண சமயக் கொள்கை. இதுவரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும், இனியும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றப் போகிறார்கள் என்பதும் இந்த மதக்கொள்கையாகும்.

இதுவரை தோன்றியுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களின் பெயர் வருமாறு:

1. விருஷப தேவர் (ஆதி பகவன்).
2. அஜிதநாதர்.
3. சம்பவ நாதர்.
4. அபி ந‍ந்தனர்.
5. சுமதி நாதர்.

6. பதும நாபர்.
7. சுபார்சவ நாதர்.
8. சந்திரப் பிரபர்.
9. புஷ்ப தந்தர் (சுவிதி நாதர்).
10. சீதள நாதர் (சித்தி பட்டாரகர்).

11. சீறியாம்ச நாதர்.
12. வாசு பூஜ்யர்.
13. விமல நாதர்.
14. அந‍ந்த நாதர் (அந‍ந்த ஜித் பட்டாரகர்).
15. தருமநாதர்.

16. சாந்தி நாதர்
17. குந்துநாதர் (குந்து பட்டாரகர்).
18. அரநாதர்.
19. மல்லிநாதர்.
20. முனிசுவர்த்தர்.

21. நமிநாதர் (நமிபட்டாரகர்).
22. நேமிநாதர் (அரிஷ்டநேமி).
23. பார்சுவநாதர்.
24. வர்த்தமான மகாவீர‍ர்.