பக்கம்:சமணமும் தமிழும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சமணமும் தமிழும்


சமண தீர்த்தங்கர‍ர்கள் பெயர் உயரம் ஆயுள்...(தொடர்ச்சி)
பெயர் உயரம் ஆயுள்
8. சந்திரப்பிரபா 150-வில் 10 லக்ஷ பூர்வ ஆண்டு
9. புஷ்பதந்தர் 150-வில் 2 லக்ஷ பூர்வ ஆண்டு
10. சீதளநாதர் 100-வில் 1 லக்ஷ பூர்வ ஆண்டு
11. சிறீயாம்சநாதர் 80-வில் 80 லக்ஷம் ஆண்டு
12. வாசு பூஜ்யர் 70-வில் 70 லக்ஷம் ஆண்டு
13. விமலநாதர் 60-வில் 60 லக்ஷம் ஆண்டு
14. அந‍ந்தநாதர் 50-வில் 30 லக்ஷம் ஆண்டு
15. தருமநாதர் 45-வில் 10 லக்ஷம் ஆண்டு
16. சாந்திநாதர் 40-வில் 1 லக்ஷம் ஆண்டு
17. குந்துநாதர் 35-வில் 95 ஆயிரம் ஆண்டு
18. அரநாதர் 30-வில் 84 ஆயிரம் ஆண்டு
19. மல்லிநாதர் 25-வில் 55 ஆயிரம் ஆண்டு
20. முனிசுவர்த்தர் 20-வில் 30 ஆயிரம் ஆண்டு
21. நமிநாதர் 15-வில் 10 ஆயிரம் ஆண்டு
22. நேமிநாதர் 10-வில் 1 ஆயிரம் ஆண்டு
23. பார்சுவநாதர் 9-முழம் 100 ஆண்டு
24. மகாவீர‍ர் 7-முழம் 72 ஆண்டு

இவ்வாற ஆயிரக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தவராக‍க் கூறப்படுகிற முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கர‍ர்களைக் கற்பனைப் பெரியார் என்று ஒதுக்கிவிட்டு முறையே 100 ஆண்டும் 72 ஆண்டும் உயிர் வாழ்ந்தவராக‍க் கூறப்படுகிற கடைசி இரண்டு தீர்த்தங் கர‍ராகிய பார்சுவநாதரையும் மகாவீர‍ரையும் உலகத்தில் உயிர் வாழ்ந்திருந்த உண்மைப் பெரியார் என்றும் கொண்டு, இவர்கள் காலத்தில்தான் சமணமதம் தோன்றியிருக்கவேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

ஆராய்ந்து பார்த்தால் தீர்த்தங்க‍ர‍ர் அனைவரும் உண்மையில் உயிர் வாழ்ந்திருந்த பெரியார் என்பதும் கற்பனைப் பெரியார் அல்லர் என்பதும் புலப்படும். பண்டைக் காலத்திலிருந்த சமயப் பெரியார்களைப் பற்றிப் பிற்காலத்தவர், மக்கள் இயற்கைக்கு மேற்பட்ட இயல்புகளைக் கற்பித்துக் கதை எழுதுவது வழக்கம். இது எல்லா மதங்களுக்கும்