பக்கம்:சமணமும் தமிழும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

168 சமணமும் தமிழும் பட்டது. முடி கொண்ட சோழபுரத்தில் இருந்த சந்திரப் பிரபசுவாமி கோயில் என்னும் சமணக் கோயிலுக்கு ஒரு கிராமம் தானம் செய்யப்பட்ட செய்தியை இந்தச் சாசனம் கூறகிறது. முடி கொண்டசோழன் என்பது முதலாவது இராசராசன் பெயர் ஆகும். திகமூர்த்திமலை : உடுமகப்பேட்டை தாலுகாவில் உடு மலைப்பேட்டையிலிருந்து கிழக்கே 11 மைலில் உள்ளது. ஆனை மலைக்குன்றின் அடிவாரத்தில் உன்ன ஊர். இங்குள்ள ஒரு அருவியின் பக்கத்தில் 30 அடி உயரம் உள்ள பாறை யும் இப்பாறையில் ஒரு சமணத் திருமேனியும் காணப்படு கின்றன. சமணத் திருமேனியின் அருகிலே பரிவாரத் தெய்வங்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இவ்வுரு வங்கள் தேய்த்து மழுங்கிக் காணப்படுகின்றன. இந்தப் பாறையானது மலையின் மேலிருந்து உருண்டு விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சாசனம் ஒன்று இத்திருமேனியை அமனசாமி என்றும் இவ்வூருக்கு அமணசமுத்திரம் என்பது பெயர் என்றும் கூறுகிறது. அமணசாமி அமணசமுத்திரம் என்னும் பெயர்களே இங்குச் சமணர் இருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. இப்போது இந்த இடம் திரிமூர்த்திமலை என்று வழங்கப் படுகிறது - திருமூர்த்தி என்பது அருகக்கடவுளுக்குப் பெயர். இந்தத் திருமூர்த்தி என்னும் பெயரை திரிமூர்த்தி என்று மாற்றி பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் திரி மூர்த்தியைக் குறிக்கிறது என்று இப்போது கூறுகிறார்கள், சீனாபுரம் : ஈரோடு தாலுகாவில் உள்ளது. இக்குச் சமணருடைய ஆதிராதர் கோயில் உண்டு, இந்தச் சின புரந்தான் பண்டைக்காலத்தில் சனகாபுரம் என்று வழங் சுப்பட்டதென்றும், இக்குப் பவணந்திமுனிவர் வாழ்க் திருந்து கன்னூல் என்னும் இலக்கண நூலை இயற்றினார் என் ரம் கூறுவர். பவணந்திமுனிவரின் சனகாபுரம் இது அன்று என்றும் அது வேறு ஊர் என்றும் வேறுசிலர் கரு.அவர். (செந்தமிழ் 5-வும் தொகுதி காண்க) 1.10 of 1910. 2.5. I. Ep. An. Rep. 1926-27. P. 118. ர். பவம் இல அன்வ